ஓவியர் டாவின்சியும், இயேசுவின் திருமணம் பற்றி பீஜே அவர்களின் பதிலும் – பாகம் 2

முன்னுரை: 

இயேசுவிற்கு திருமணமானதா? என்ற கேள்விக்கு பீஜே அவர்கள் பதில் கொடுத்துள்ளார். இஸ்லாமின் படி, இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதைப் பற்றி நான் முதலாவது பாகத்தில் விளக்கினேன் (முதல் பாகத்தின் தொடுப்பு). 

இந்த இரண்டாம் பாகத்தில், டாவின்சி ஓவியத்தையும், டாவின்சி கோட் என்ற படத்தையும் மேற்கோள் காட்டி, பீஜே அவர்கள் சொன்ன பதிலை ஆய்வுச் செய்யப்போகிறோம். 

கீழ்கண்ட தலைப்புகளில், இந்த இரண்டாம் பாகத்தை அலசுவோம்:

பாகம் 2

1) டாவின்சியின் ”லாஸ்ட் சப்பர்” படமும், பீஜே அவர்களின் பதிலும்

2) லாஸ்ட் சப்பர் படத்தில் மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? டாவின்சி ஓவியத்தில் உள்ள ஓட்டைகள் (பீஜேயின் ஆய்வு இஸ்லாமுக்கு தேய்வு)

3) டாவின்சி இஸ்லாம்/முஹம்மது பற்றி படம் வரைந்திருந்தால்…?

4) டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி பீஜே அவர்கள் என்ன சொல்வார்கள்?

5) இயேசுவின் திருமணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

6) மகதலேனா மரியாள் விஷயத்தில் “அல்லாஹ்வை பொய்யராக்கும்” பீஜே 

7) முடிவுரை


1) டாவின்சியின் ”லாஸ்ட் சப்பர்” படமும், பீஜே அவர்களின் பதிலும் 

முதலாவது, பீஜே அவர்களுக்கு வந்த கேள்வியையும், அதற்கு அவர் கொடுத்த பதிலையும் படிப்போம்.

கேள்வி :

நபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா?. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்?

PJ அவர்களின் பதில் 

ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது. 

மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்ஸிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர், 

மேற்கண்ட பதிலில், இரண்டாவது பத்தியில் பீஜே அவர்கள் கொடுத்த பதிலின் உண்மையை ஆய்வு செய்வோம்.

லியொனார்டோ டாவின்சியின் காலம் (கி.பி. 1452 – கி.பி. 1519) 

டாவின்சி என்பவர் புகழ் பெற்ற ஓவியர். இவரின் மோனா லிசா என்ற ஓவியமும், இயேசுவின் கடைசி விருந்து (லாஸ்ட் சப்பர்) ஓவியமும் புகழ்பெற்றவைகள். இவர் வாழ்ந்த காலக்கட்டம் 15ம் நூற்றாண்டாகும். அதாவது இவர் இயேசுவிற்கு பிறகு கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர் ஆவார். இந்த விவரங்கள் இந்த கட்டுரையை சரியாக புரிந்துக்கொள்ள நமக்கு உதவும். பீஜே அவர்களின் பதிலை படிக்கும் போது, கீழ்கண்ட விவரங்கள் நமக்கு கிடைக்கின்றன:

புகழ்பெற்ற ஓவியர் டாவின்சியின் ஓவியங்கள் இரண்டை பீஜே குறிப்பிடுகின்றார்: மோனா லிசா மற்றும் இயேசுவின் கடைசி விருந்து.

  • இயேசுவின் கடைசி விருந்து ஓவியத்தில், இயேசுவிற்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதை காணமுடிகின்றதாம்.
  • மகதலேனா மரியாள் மூலமாக இயேசுவிற்கு ஒரு மகள் இருக்கிறார்களாம்.
  • இந்த மகளைப் பற்றி டாவின்சி கோட் என்ற படத்தில் ”பல ஆதாரங்கள் மூலம்” எடுத்து காட்டப்பட்டுள்ளதாம்.

அந்த படத்தில் காட்டப்பட்ட விஷயங்கள் பீஜே அவர்களுக்கு “பல ஆதாரங்களாக” தென்பட்டுள்ளது. அதாவது அவைகள் உண்மை தான் என்று இவர் நம்புகிறார், அதனால் தான் தன் பதிலிலும் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன் இயேசுவை வந்து பார்த்தவர்களில் மகதலேனா மரியாள் முதலாவது பெண் என்று பீஜே சொல்கிறார். பீஜே தவறாக சொல்லியுள்ளார், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இல்லை, அவர் உயிர்த்தெழுந்த பிறகு முதலாவது அவரைக் கண்டு பேசியது மகதலேனா மரியாள் ஆவார். சிலுவையில் அறையப்பட்டபோது ஊர் மக்கள் அனேகர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.  (ஆனால், இந்த ஆதாரத்தை எதிலிருந்து பீஜே எடுத்துச் சொல்கிறார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா? புதிய ஏற்பாட்டிலிருந்து தான். முஸ்லிம்களுக்கு தேவைப்படும் போது பைபிளிலிருந்து வசனங்களை எடுப்பார்கள். பைபிளை குற்றப்படுத்த விரும்பினால், அவ்வசனங்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்வார்கள்).

இயேசுவிற்கு துறவி போன்ற ஒரு இமாஜை கொடுத்தால் தான் மதத்தை பரப்பமுடியுமாம், ஆகையால், கிறிஸ்தவர்கள் இயேசுவின் குடும்ப வாழ்க்கையை இருட்டடிப்பு செய்துவிட்டார்களாம். மேற்கண்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், பீஜே அவர்களின் பொய்களுக்கும் சரியான பதிலைச் சொல்லவேண்டியது, கிறிஸ்தவர்களின் கடமையல்லவா? முக்கியமாக இஸ்லாம் என்ற அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்து, எனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க இந்த பூமியில் இறங்கி வந்து, எனக்காக மரித்து முன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்துவை பின் பற்றும் என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு முக்கிய கடமையல்லவா?

வாருங்கள், உலக புகழ்பெற்ற ஓவியர் டாவின்சியின் லாஸ்ட் சப்பர் (இயேசுவின் கடைசி விருந்து) ஓவியத்தில் உள்ள ஓட்டைகளை காண்போம். 

[முக்கிய குறிப்பு: நான் ஓவியர் டாவின்சியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வரவில்லை. இவர்கள் சொல்வதுபோல இயேசுவைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அவர் ஓவியங்களை வரையவில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவருடைய கற்பனைத்திறன், அனுபவம் மற்றும் விருப்பத்தின் படியே அவர் வரைந்துள்ளார். ஆனால், அவரது ஓவியத்தை முன்வைத்து முஸ்லிம்கள் மற்றும் இதர மக்கள் கிறிஸ்தவத்தை விமர்சிப்பதினால், ஒரு ஆரோக்கியமான முறையில் அந்த படத்தை ஆய்வு செய்கிறோம். இதன் மூலம் முஸ்லிம்களின் அறியாமையும், கயமைத்தனமும் வெளிப்படும் என்பதை உலகிற்கு காட்டவே இந்த விவரங்கள் தரப்படுகின்றன. தனிப்பட்ட முறையில் கலைஞர்களை நான் மதிக்கிறேன், அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை அவர்கள் பயன்படுத்த நான் கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஒரு கலைஞனின் ஓவியங்கள்/புத்தகங்கள் என் கருத்துக்களுக்கு நம்பிக்கைக்கு எதிராக இருந்தால், என்னால் முடிந்த பதிலை கொடுக்க விரும்புவேன், உண்மையை உலகம் அறிய வேண்டுமென்று விரும்புவேன். இதை விட்டுவிட்டு, அவர்களை பயமுறுத்தி, அவர்களை அழிக்க விரும்ப மாட்டேன். இது என் கருத்து மட்டுமல்ல, கிறிஸ்தமும் இதைத் தான் செய்கிறது. ]

2. லாஸ்ட் சப்பர் படத்தில் மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? டாவின்சி ஓவியத்தில் உள்ள ஓட்டைகள் 

  1. இந்த கட்டுரையை எழுதுவதற்கு இந்த குறிப்பிட்ட தொடுப்பு எனக்கு பெரும் உதவியாக இருந்தது: www.jaydax.co.uk/lastsupper/lastsupper.htm
  2. இந்த படத்தை ஒரு முறைக்கு பலமுறை கூர்ந்து கவனிக்கவும்: டாவின்சி வரைந்த ஓவியம்: www.jaydax.co.uk/lastsupper/lastsupper.jpg
  3. இதே ஓவியம் விக்கிபீடியாவிலிருந்து (டாவின்சியின் ஓவியத்தை பழுது பார்க்கப்பட்டபின்பு இப்படி காணப்படுகின்றது): upload.wikimedia.org/wikipedia/commons/1/11/Giampietrino-Last-Supper-ca-1520.jpg

இந்த படத்தை இக்கட்டுரையை படிக்கும் போது அடிக்கடி வந்து பார்த்தால் தான் விவரங்கள் புரியும். ஓவியத்தின் பின்னணி: அந்த இரவு விருந்தில் இயேசு பல விஷயங்களை பேசினார், ஆனால், இந்த ஓவியம் “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு சொன்னபோது, ஒவ்வொரு சீடரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்ட போது, எப்படி சூழ்நிலை இருந்திருக்கும் என்பதை இந்த ஓவியம் காட்டுகிறது, பார்க்க யோவான் 13:21-25:

யோவான் 13:21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். 13:22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 13:23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 13:24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 13:25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

இப்போது பீஜே தவறுதலாக மேற்கோள் காட்டிய ஓவியத்தில் உள்ள ஓட்டைகளை காண்போம். டாவின்சி இயேசுவின் இரவு விருந்து நடந்து முடிந்து 1400 ஆண்டுகளுக்கு பின்பு வாழ்ந்தவர் என்பதை கவனத்தில் வைக்கவும்.

அ) ஓவியத்தில் காணப்படும் குவளைகள் மற்றும் தட்டுகள்:

படம் 1: குவளைகளும் தட்டுகளும்

டாவின்சி ஓவியத்தில் கண்ணாடி குவளைகள் காணப்படுகின்றன, அவைகளில் சிகப்பான திராட்சை ரசம் காணப்படுகின்றது. மேலும் தட்டுகளும் காணப்படுகின்றது. இயேசு வாழ்ந்த காலத்தில், எருசலேமில் வாழ்ந்த மத பக்தியுள்ள யூதர்கள் ரோமர்கள் போல கண்ணாடியினால் அல்லது உலோகங்களினால் தயாரிக்கப்பட்ட குவளைகளில் பானம் அருந்துவதில்லை. மண் குவளைகளிலும், அல்லது கட்டையினால் ஆன குவளைகளிலும் தான் அருந்துவார்கள். யூதர்களில் பணம் படைந்த பெரிய செல்வந்தர்கள் தான் இப்படி உலோகங்களினால் ஆன குவளைகளில் பானம் அருந்துவார்கள். இதே போல, இந்த ஓவியத்தில் காணப்படும் தட்டுகளுக் உலோகங்களினால் ஆனவைகளாக காணப்படுகின்றன, இதுவும் தவறாகும். ஓவியம் வரையும் போது ஓவியரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு இது வரையப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த ஓவியத்தை சரியாக நாம் ஆய்வு செய்யும் போது, வரையப்பட்ட ஒவ்வொரு சின்ன விஷயமும் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டதாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஓவியரிடத்தில் காணப்படவில்லை என்பது புலப்படும். அடுத்த விவரத்தை பார்க்கவும்.

ஆ) இது கடைசி இரவு விருந்து “கடைசி பகல் விருந்து அல்ல”

இந்த ஓவியத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை, இந்த நிகழ்ச்சி நடந்த நேரம் பற்றியதாகும். பைபிள் படி, பஸ்கா விருந்து இரவில் கடைபிடிக்கப்படுகின்றது. அதாவது இறுதி இராவுணவு (லாஸ்ட் சப்பர் - Last Supper) என்பது இரவு உணவை குறிக்கும், பகல் உணவை குறிக்காது (Last Lunch).

யாத்திராகமம் 12ம் அத்தியாயத்தில் காணப்படுவது போல, பஸ்கா பண்டிகை உணவை இரவில் சாப்பிடவேண்டும். யாத்திராகமம் 12:8ம் வசனத்தை கவனியுங்கள்.

யாத் 12:5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். 12:6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, 12:7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, 12:8 அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

இதே போல, இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டது இரவில், பகலில் அல்ல. பஸ்காவை புசித்து, உடனே இயேசு கெத்சமனே தோட்டத்துக்குச் செல்கிறார், அந்த இரவு அவரை கைது செய்கிறார்கள். ஆனால், டாவின்சியின் ஓவியத்தில் நாம் காண்பது என்ன? மேற்கண்ட படத்தை கவனித்துப் பாருங்கள். அதில் மூன்று ஜன்னல்கள் காணப்படுகின்றன, அவைகளிலிருந்து வெளிச்சம் வருகிறது, அதாவது பகலில் அந்த விருந்து நடந்ததாக டாவின்சி சித்தரித்து இருக்கிறார். மேலும் இடது புறத்திலிருந்து ஒரு வெளிச்சம் (ஜன்னல், அல்லது கதவிலிருந்து) வந்து எதிர் புறமிருக்கும் சுவரில் படுவதை காணமுடியும். இது பகலில் அல்லது சாயங்கால வேளையில் (இன்னும் சூரியன் அஸ்தமிக்காமல் இருக்கும்போது) நடந்ததாக, டாவின்சி வரைந்துள்ளார். யூதர்கள் தங்கள் பாரம்பரியங்களில், பண்டிகைகளில் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யமாட்டார்கள். மத விஷயங்களில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தவறாது செய்பவர்கள். இரவில் கொண்டாடவேண்டிய விருந்தை, பகலில் அவர்கள் செய்யமாட்டார்கள். இது டாவின்சியின் ஓவியத்தில் காணப்படும் இன்னொரு மிகப்பெரிய ஓட்டையல்லவா?

படம் 2: ஜன்னல்கள் மற்றும் பகலின் வெளிச்சம்

படம் 3: சுவரில் படும் வெளிச்சம்

பீஜே அவர்களுக்கு கேள்வி: நீங்கள் மேற்கோள் காட்டிய ஓவியரின் படத்தில் காணப்படும் வெளிப்படையான பிழையைப் பார்த்தீர்களா? ஓவியத்தை வரையும் போது, அழகிற்காகவும், தெளிவாக தெரியவேண்டும் என்பதற்காகவும், கற்பனையாக சில விஷயங்களை ஓவியர்கள் சேர்ப்பார்கள் என்பதற்கு இந்த விஷயம் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். இன்னும் ஓட்டைகள் பெரிதாகிக்கொண்டு இருக்கிறது, மேற்கொண்டு படியுங்கள்.

இ) பஸ்கா ஆட்டுக்குட்டி, பஸ்கா மீன் இல்லை

இந்த ஓவியத்தில் இன்னொரு தவறும் உள்ளது. அதாவது பஸ்கா பண்டிகையை ஒர் ஆட்டின் இறைச்சியோடும், புளிப்பில்லாத ரொட்டிகளோடும் கொண்டாடுவார்கள். டாவின்சியின் படத்தை பார்க்கும் போது, அதில் “மீன், அப்பம், திராட்சை இரசம், இன்னும் கீரைகள்” இருப்பதை காணமுடியும், ஆனால், முக்கியமான உணவாகிய ஆட்டின் இறைச்சி இல்லை என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் காணப்படுவது புளிப்பில்லாத அப்பமாக தெரியவில்லை, ஈஸ்ட் கலந்த (புளிப்பு கலந்த) அப்பமாக காணப்படுகின்றது. நாம் இன்று காணும் பண் என்று சொல்லக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. இதுவும் தவறாகும். உணவு விஷயத்தில் இரண்டு தவறுகள் இப்படத்தில் காணப்படுகின்றது, ஆட்டு இறைச்சி இல்லை மற்றும் புளிப்பில்லாத அப்பம் இல்லை.

படம் 4: மீன் மற்றும் அப்பம்

பீஜே அவர்களுக்கு கேள்வி: ஒரு சரித்திர நிகழ்வைச் சித்தரிக்கும் போது அக்காலத்துக்கு ஏற்றவாரும், அவர்களின் பழக்கவழக்கங்களின்படியும் வரைவது தானே உண்மையான ஒன்றாக இருக்கும். ஆனால், உங்கள் டாவின்சி இதில் தவறு செய்துள்ளாரே! இதற்கு உங்களின் பதில் என்ன?

ஈ) கம்பளம் விரிக்கப்பட்ட மேலறை - நாற்காலி, மேஜைகள் கொண்ட அறை அல்ல

பஸ்காவை கொண்டாட, இயேசு சீடர்களை அனுப்பும்போது “கம்பளம் விரிக்கப்பட்ட இடம் கிடைக்கும் அதை ஆயத்தம் செய்யுங்கள்” என்றார், ஆனால், டாவின்சியின் ஓவியத்தில் நாம் கண்பது, நாற்காலிகள், மேஜைகள் கொண்ட ஒரு விருந்தாகும். மிகப்பெரிய செல்வந்தர்களாக இல்லாத யூதர்களின் வீடுகளில், கம்பளம் விரிக்கப்பட்ட அறைகளில் உண்பது தான் வழக்கமாக இருக்கும். இதனை லூக்கா சுவிசேஷத்தில் காணலாம்: லூக்கா 22:7-12

22:7 பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. 22:8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார். 22:9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 22:10 அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய், 22:11 அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள். 22:12 அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

இப்போது முக்கியமான விவரத்திற்கு வருவோம்.

உ) இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பது இயேசுவிற்கு பிரியாமான சீடர் யோவானா? அல்லது மகதலேனா மரியாளா?

முதலாவதாக, புதிய ஏற்பாட்டில் நாம் காண்பது, அந்த இரவு உணவு விருந்தில், 13 நபர்கள் இருந்தார்கள், அதாவது இயேசுவும் அவரது 12 சீடர்களும். இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பது, மகதலேனா மரியாள் என்றால், யோவான் எங்கே சென்று இருக்கிறார்? இயேசுவின் அன்பான சீடர் இல்லாமல், இந்த நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு இல்லை. புதிய ஏற்பாட்டின் அடிப்படையிலும், தொன்று தொட்டு வந்திருக்கும் சபை பாரம்பரியத்தின் படியும், இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பவர் யோவான் தான், மகதலேனா மரியாள் அல்ல. 

யோவான் 13: 21-25ம் வசனங்களில், இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டு இருப்பவன் “இயேசுவிற்கு அன்பான சீடன் என்று” சொல்லப்பட்டுள்ளது:

யோவான் 13:21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். 13:22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 13:23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 13:24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.13:25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் படி, இயேசுவிற்கு அடுத்தபடியாக அமர்ந்து இருந்தவர் யோவான் ஆவார். ஆனால், 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு வரையப்பட்ட ஒர் ஓவியம் வேறுவிதமாகச் சொன்னால், அது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? இதே போல இஸ்லாம் பற்றியும் வரையப்பட்டால் பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அதாவது 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் பற்றி தவறாக வரையப்பட்டால் பீஜே அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், டாவின்சி அதனை மகதலேனா மரியாள் என்று சொல்லவில்லை, தற்கால இஸ்லாமியர்களும் ஒரு சில நாத்தீகர்களும் தான் இப்படி மாற்றிச் சொல்கிறார்கள். படத்தை நாம் ஆய்வு செய்யும் போது, அவர் யோவான் என்ற இளவயது சீடர் என்று தான் தெரியவருகிறது.

இரண்டாவதாக, இயேசுவின் சீடர்களில் மிகவும் இளவயது உடையவர் யோவான் என்ற சீடர், இவர் முதல் நூற்றாண்டின் இறுதி வரை உயிரோடு இருந்ததாக பாரம்பரியங்களும், சரித்திரங்களும் சொல்கின்றன. டாவின்சியின் ஓவியத்தை நாம் பார்க்கும்போது, இயேசுவிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்து இருப்பது பெண் என்று எண்ணத்தோன்றும். ஆனால், ஒருவரை பார்த்த போது, பெண் போல தென்பட்டால், அதுவே அவர் பெண் என்பதற்கு ஆதாரமாக கொள்ளமுடியுமா? பைபிளையும், சரித்திரங்களையும் நாம் கவனிக்கும்போது, அந்த நபர் மகதலேனா மரியாள் அல்ல, யோவான் என்பது விளங்கும்.

கீழ்கண்ட விவரங்கள் நமக்கு இதற்கு உதவும்:

இயேசுவின் சீடர்களில் இளவயது உள்ளவரை மற்ற சீடர்களைக் காட்டிலும் வித்தியாசமாக காண்பிக்க ஓவியர்கள் விரும்பி, பெண் போல வரைந்துள்ளார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இப்படி வாலிபர்களை வரைவது டாவின்சி காலத்தின் வழக்கம் என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். இதை இவர் புதிதாக கண்டுபிடிக்கவில்லை, இவரது காலக் கட்டத்தில் எல்லா ஓவியர்களும் இப்படியே வரைந்துள்ளார்கள்.

இதைப் பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: arthistory.about.com/od/renaissanceart/a/altheyoungdudes.htm

கீழ்கண்ட தொடுப்புகளை சொடுக்கி அவைகளில் உள்ள படங்களில் வாலிப ஆண்களை எப்படி வரைந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும் (கி.பி. 1313ம் ஆண்டிலிருந்து 1516ம் ஆண்டுவரை வரையப்பட்ட ஓவியங்கள்):

மூன்றாவதாக, இயேசுவிற்கு வலது புறத்தில் அமர்ந்திருக்கும் நபரின் கழுத்தில் ஒரு சங்கிலி போன்ற ஒன்று இருக்கிறது என்பதால், அது மகதலேனா மரியாள் தான் என்ற  வாதத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். ஆனால், இவர்கள் கவனிக்க தவறுவது என்னவென்றால், அந்த நபர் போட்டு இருக்கும் மேலங்கியின் ஒரு பட்டன் (Button) தான் அது. அது ஒரு சங்கிலியல்ல. இந்த நபர் அணிந்து இருப்பது நக்லஸ் என்று சொல்லக்கூடிய சங்கிலி என்று சொன்னால், அதே போல, இதர ஆறு நபர்கள் இந்த படத்தில் அணிந்துள்ளார்கள்.  இந்த வாதத்தின் படி, இந்த ஆறு பேரும் பெண்கள் தானா?  இந்த ஓவியத்தில் இயேசுவும் அப்படிப்பட்ட மேலங்கியையே அணிந்துள்ளார், அதற்கும் ஒரு பட்டன் போன்ற ஒன்று இருக்கிறது. எனவே இந்த வாதமும் சரியானது அல்ல.  13 பேரில் ஏழு பேருடைய உடைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றபடியினால், அதில் ஒருவர் பெண் என்று சொல்வது சரியாகாது.

படம் 5: மேலங்கியில் உள்ள பொத்தான் (பட்டன்)

நான்காவதாக,  இயேசுவிற்கு வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரின் புருவங்கள், பெண்களுக்கு இருப்பது போன்று உள்ளது. அதாவது, பெண்கள் தங்கள் புருவங்கள் அழகாக காணப்படவேண்டும் என்பற்காக அவைகளை சரி செய்வது வழக்கம் (அதிகபடியான முடிகளை சவரம் செய்து எடுத்துவிடுவது). இந்த வழக்கம் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்தது என்ற நிச்சயமாகச் சொல்லமுடியாது, ஆனால், டாவின்சியின் காலத்தில் இது இருந்துள்ளது. இந்த புருவங்களைப் பார்த்து அந்த நபர் மகதலேனா மரியாள் தான் என்ற வாதமும் உள்ளது.  ஆனால், இந்த ஓவியத்தை சரியாக பார்த்தால்,  இயேசுவிற்கு இடது புறத்தில் மூன்றாவதாக இருக்கும் பிலிப்பு என்ற சீடரின் புருவங்களும் பெண்கள் செய்வது போல சவரம் செய்யப்பட்டுள்ளது.  ஆகையால், மகதலேனா மரியாள் இந்த ஓவியத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சரியான வாதம் இல்லை.

படம் 6: புருவங்கள்

ஐந்தாவதாக, இயேசுவின் வலது பக்கத்தில் உள்ள நபர், யோவான் அல்ல, அவர் மகதலேனா மரியாள் ஏனென்றால், அவருடைய தலை முடியைப் பார்த்தால், ஒரு ஆணின் முடியைப்போல  அல்லாமல் பெண்ணின் தலைமுடி போல உள்ளது என்ற வாதமும் முன்வைக்கப்படும்.  ஆனால், இந்த ஓவியத்தில் அனேகருக்கு பெண்களைப்போல தலை முடி இருப்பதை காணலாம். யோவானுக்கு மட்டுமல்ல, இயேசுவிற்கும்,  அவருடைய இடது பக்கத்தில் அமர்ந்திருக்கும் இரண்டாவது, மூன்றாவது சீடருக்கும் தலைமுடி யோவானுக்கு இருப்பதைப்போலவே உள்ளது. எனவே, தலைமுடியைப் பார்த்து, அவர் மகதலேனா மரியாள் என்று சொல்லக்கூடிய வாதம் கூட அடிபட்டு போகிறது. 

படம் 7: தலைமுடி

ஆறாவதாக, அந்த நபருக்கு தாடியில்லை, மற்றவர்களுக்கு உள்ளது என்று சொன்னாலும், இந்த வாதம் எடுபடாது. ஏனென்றால்,  இந்த படத்தில் உள்ள வேறு இரண்டு சீடர்களும் தாடியில்லாமலேயே இருக்கிறார்கள். இயேசுவின் இடது பக்கத்தில் உள்ள இரண்டு சீடர்களுக்கு தாடியில்லை என்பதை கவனிக்கவும். இந்த வாதமும் மகதலேனா மரியாள் இப்படத்தில் இல்லையென்பதையே தெரிவிக்கிறது. 

படம் 8: தாடியில்லாத சீடர்கள்

ஏழாவதாக, நன்றாக கவனியுங்கள், பேதுருவின் கையின் விரல்கள், யோவானின் கழுத்து பக்கத்தில் இருக்கின்றன.  ஒரு ஆண் மட்டுமே இன்னொரு ஆணின் தோளில் இப்படி கை வைத்து பேசமுடியும்.  அந்த நபர் மகதலேனா மரியாளாக இருந்தால், பேதுருவின் இந்த செயல் ஒரு தீய செயலாக இருக்கும்.  உங்களில் ஒருவர் என்னை காட்டிக்கொடுப்பார் என்று இயேசு சொன்னபோது, யோவானை அழைத்து “அது யார்?” என்று கேள் என்று சீடர்கள் யோவானிடம் கேட்டதாக பைபிள் சொல்கிறது. இந்த நேரத்தில் தான் பேதுரு யோவானை அழைத்து கேட்கிறார். இந்த ஓவியத்தில் மகதலேனா மரியாள் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். உண்மையில், இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் டாவின்சி சரியாகத் தான் படம் வரைந்துள்ளார். ஒவ்வொரு சீடரின் முகத்தில் உள்ள கேள்வியையும், ஆச்சரியத்தையும் பாருங்கள்.

படம் 9: பேதுருவின் கைவிரல்கள், யோவானை அழைக்கிறது.

இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து டாவின்சியின் ஓவியத்தில் மகதலேனா மரியாள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக  தெரிகின்றது.

3) டாவின்சி இஸ்லாம்/முஹம்மது பற்றி படம் வரைந்திருந்தால்…?

இயேசுவிற்கு 1400 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் வரைந்த ஓவியத்தில் உள்ளதை உண்மை என்று நம்பும் பீஜே அவர்கள், அதே டாவின்சி இஸ்லாம் பற்றி வரைந்திருந்தால், அதுவும் இஸ்லாமுக்கு 1400 ஆண்டுகளுக்கு பிறகு  வரைந்திருந்தால், பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

முஹம்மதுவிற்கு 1400 ஆண்டுகளுக்கு பிறகு நாம் இன்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.  ஒருவேளை இந்த காலக்கட்டத்தில், ஒரு புகழ்பெற்ற ஓவியர் அல்லது புகழ்பெற்ற நாவலாசியர் ஒரு புத்தகத்தை இஸ்லாம் பற்றி எழுதினால், அதில் உண்மைக்கு புறம்பான விவரங்கள் இஸ்லாம் பற்றி எழுதப்பட்டு இருந்தால்  அதனை பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?  சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகம் வெளிவந்த பிறகு என்ன நடந்தது என்று அனைவரும் அறிவோம். தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்கின்ற இஸ்லாமியர்கள் செய்த அடாவடிகள், பத்வாக்களை நாம் அனைவரும் அறிவோம். பீஜே அவர்களின் லாஜிக்கின் படி, தற்காலத்தில் இஸ்லாம் பற்றி ஓவியங்கள் வரைந்தாலும் புத்தகம் எழுதினாலும், அதனை பீஜே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? எது உண்மை எது பொய் என்பவைகளை அவர் பார்க்கமாட்டாரா, கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார் என்ற முடிவிற்கு நாம் வரலாமா? (இதில் வேடிக்கை என்னவென்றால், நவீன கால ஓவியங்களை விடுங்கள், இஸ்லாமின் அஸ்திபார நூல்களாகிய குர்-ஆன், ஹதீஸ்களிலேயே இன்னும் (1400 ஆண்டுகள் கழித்தும்) இவர்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லை, 1400 ஆண்டுகள் கழித்தும் ஹதீஸ்கள் பொய்யானவை என்று தள்ளுபடி செய்கிறார்கள் இவர்கள். ஹஃப்ஸ் குர்-ஆனா? வார்ஷ் குர்-ஆனா? எது அல்லாஹ்வின் வார்த்தை என்பதில் ஓயாத சண்டை நடந்துக்கொண்டு இருக்கிறது.)

குறிப்பு: இஸ்லாமுக்கு எதிராக புத்தகம் எழுதத்தேவையில்லை. இஸ்லாமில் உள்ளதை அப்படியே ஓவியங்கள் வரைந்தாலும், புத்தகங்கள் எழுதினாலும், முஸ்லிம்களின் மனம் புண்படும். ஏன் என்பதை வாசகர்களே, முஸ்லிம்களிடம் கேட்டுப்பாருங்கள்.

4) டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி பீஜே அவர்கள் என்ன சொல்வார்கள்?

பீஜே அவர்கள் டாவின்சியின் ஒரு ஓவியத்தைப் பற்றி தம்முடைய விசுவாசத்தை தெரிவித்தார். ஏனென்றால், அதில் கிறிஸ்தவத்திற்கு எதிராக விஷயங்கள் இருக்கிறது என்று அவர் நம்பிவிட்டார். அவருடைய அந்த நம்பிக்கையில் உள்ள பிழைகளையும், டாவின்சியின் ஓவியத்தில் உள்ள ஓட்டைகளையும், இக்கட்டுரையில் நாம் கண்டோம்.  

ஒருவேளை டாவின்சி முஸ்லிமாக மாறிவிட்டார் என்று பீஜே அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.  இப்போது டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி இஸ்லாமுடைய நிலைப்பாடு என்ன? பீஜே அவர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை சுருக்கமாக காண்போமா!

எச்சரிக்கை: ஓவியர்கள் என்றாலே அவர்களுக்கு கற்பனைகள் சிறகடித்துப் பறக்கும்.  பெண்களை நிலவோடு ஒப்பிட்டு கவிதை எழுதாத கவிஞன் கவிஞனல்ல என்று யாரோ சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது.  அதே போல, பெண்களை வரையாத ஓவியன் சிறந்த ஓவியனல்ல என்று சொல்லலாம். இதில் சில ஓவியர்கள் (டாவின்சி போல) பெண்களை அறை/முழு நிர்வாணமாக வரைந்துள்ளார்கள். இந்த பத்தியில் கொடுக்கப்படும் விக்கிபீடியா தொடுப்புகளில் சில டாவின்சி ஓவியங்கள் பார்ப்பதற்கு தகுதியாக இராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்க விரும்பாதவர்கள், இதனை படிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம் (ஆனால், நீங்கள் மேற்கொண்டு படிப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும்).  

பீஜே அவர்கள் அறியாமையை உலகிற்கு காட்ட இந்த தொடுப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. 

டாவின்சியின் ஓவியங்களின் விக்கிபீடியா தொகுப்பு: http://en.wikipedia.org/wiki/List_of_works_by_Leonardo_da_Vinci

மேற்கண்ட தொடுப்பில் டாவின்சியின் ஓவியங்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.  அவைகளில் இரண்டு ஓவியங்கள் பற்றி பீஜே அவர்களின் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓவியம் 1:  The Annunciation (இயேசுவின் பிறப்பு பற்றிய அறிவிப்பு):

தொடுப்பு: en.wikipedia.org/wiki/Annunciation_(Leonardo)

இந்த ஓவியத்தையும் டாவின்சி வரைந்தாராம். இதில் காபிரியேல் தூதன், மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை சொல்கிறார்.  பீஜே அவர்கள் இதன் தொடுப்பை சொடுக்கி பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன், மேலும் இந்த ஓவியத்தின் ஒவ்வொரு பகுதியையும் பெரியதாக காட்டியுள்ளார்கள், அவைகளின் தொடுப்புக்களையும் பீஜே அவர்கள் சொடுக்கி பார்க்கவேண்டும். 

கேள்வி: குர்-ஆன் 19:17-19வரையுள்ள வசனங்களின் படி, காபிரியேல் தூதன் மரியாளுக்கு ஒர் ஆண் உருவத்தில் தோன்றினார். ஆனால், டாவின்சியின் ஓவியத்தில் காபிரியேலுக்கு சிறகுகள் உள்ளது, மேலும் ஒரு பெண்ணைப் போலவே அந்த தூதன் காணப்படுகிறார்.

குர்-ஆன் 19:17-19வரை படிப்போம்:

19:17. அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.

19:18. "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

19:19. "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார். 

டாவின்சி ஓவியத்தை பெரியதாகப் பார்ப்போம்: en.wikipedia.org/wiki/Annunciation_(Leonardo)

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:  

குர்-ஆனின் படி ஜிப்ராயீல் தூதன், “ஒரு முழுமையான மனிதராக” தோற்றமளித்தார்.

டாவின்சியின் அதாவது, பீஜே அவர்கள் மேற்கோள் காட்டும் டாவின்சியின் ஓவியத்தில்,  சிறகுகள் கொண்ட ஒரு தூதனைப்போலவே தோற்றமளிக்கிறார்.

குர்-ஆன் சொல்வது உண்மையா? டாவின்சி சொல்வது உண்மையா? 

டாவின்சியின் ஓவியத்தில், ஜிப்ராயீல் தூதனின் உடைகளை கவனிக்கவும், இவைகள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் யூத முறையிலான உடைகளா? அல்லது தூதர்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட உடைகளா? பீஜே அவர்கள் இதற்கும் தம்முடைய கருத்தைச் சொல்லவேண்டும். மேலும் இதே படத்தில் வீட்டுக்கு வெளியே ஒரு கடற்கரை தெரிகின்றது. பீஜே அவர்கள் இப்படத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு, மரியாள் அவர்களின் வீடு, கடற்கரைக்கு பக்கத்தில் இருந்தது என்று வாதம் செய்வாரா?

பீஜே அவர்கள் தம்முடைய விமர்சனங்களில், ஆய்வுகளில் உண்மையாளராக இருந்தால்,  குர்-ஆன் சொல்வதுபொய்யாகும், டாவின்சி சொல்வது தான் மெய் என்று சொல்லவேண்டும். இப்படிச் சொல்வாரா? ஒருவேளை அவர் சொல்லவில்லையானால், பைபிள் மீது அவர் தன் மனதில் கசப்பை வைத்துக்கொண்டு, பொய்களை உலகத்தில் பரப்புகிறார் என்று அனைவரும் கருதவேண்டியுள்ளது.

பீஜே அவர்களின் இஸ்லாமிய போதனைகளை கண்மூடித்தனமாக  நம்பும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா? இனிமேலாவது பைபிள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்வதிலிருந்து பீஜே அவர்கள் விலகிக்கொள்ளட்டும்? மாட்டேன் என்று அடம் பிடித்தால், இப்படி மாட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.

ஓவியம் 2: The Baptism of Christ (இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுக்கும் யோவான்).

தொடுப்பு: en.wikipedia.org/wiki/The_Baptism_of_Christ_(Verrocchio)

இந்த ஓவியத்தை டாவின்சியின் குரு ”வெர்ரக்சியோ” அவர்களும், டாவின்சியும் சேர்ந்து வரைந்தார்களாம்.  இதில் காணப்படும் இரண்டு குட்டி தேவதுதர்களை டாவின்சி வரைந்தாராம், இதர விவரங்களை அவரது குரு வரைந்தாராம். 

பீஜே அவர்களுக்கு கேள்விகள்: 

இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, தேவதூதர்கள் இருந்தார்களா? இதைப் பற்றி உங்களுக்கு அல்லாஹ் ஏதாவது  வெளிப்பாடு கொடுத்துள்ளாரா?

யோவானின் கையில் உள்ள தடியை கவனிக்கவும், மேலே சிலுவையைப் போன்று வரைந்துள்ளார்கள். டாவின்சியையே நீங்கள் மேற்கோள் காட்டும் போது, அவரது குருவிற்கு எவ்வளவு மதிப்பு தருவீர்கள். எனவே, இந்த சிலுவையைப் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவும். யோவானின் கையில் சிலுவையுள்ள தடி எதற்கு? இதனால் டாவின்சி என்ன சொல்லவருகிறார்? இயேசு சிலுவையில் மரிப்பார் என்பதை யோவான் அறிந்து இருந்தார் என்பதை டாவின்சி மறைமுகமாகச் சொல்லவருகிறாரா?

யோவானின் உடையை கவனிக்கவும். பைபிளின்படி அவருடைய உடைகள் ஓவியத்தில் வரையப்பட்ட உடைகள் அல்ல. இவைகள் ஓவியர்களின் கற்பனையின் படி வரையப்பட்டவை, உண்மை சரித்திரத்தை பிரதிபலிப்பவை அல்ல.  பார்க்க மத்தேயு 3:4 இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது. 

டாவின்சி வரைந்தவைகள் தான் உண்மை என்று பீஜே அவர்கள் சொல்வார்களா?

இன்னும் அனேக ஓவியங்களை டாவின்சி வரைந்துள்ளார், அவைகளில் சில கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட ஒவியங்கள், அதாவது குழந்தை இயேசு மற்றும் மரியாள் பற்றிய ஓவியங்கள், மேலும் தேவதூதர்கள் கூட அவ்வோவியங்களில் காணப்படுகிறார்கள். இவைகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தால்,  அவைகள் இஸ்லாமுக்கு எதிரான விவரங்களையே தருகின்றன. அவைகள் பற்றி கூட பீஜே அவர்கள் விமர்சனம் அல்லது விளக்கம் தருவாரா? 

நான் சொல்லவருவது இது தான், ஓவியங்களை  வைத்துக்கொண்டு சரித்திரத்தை ஓரளவிற்குத் தான் சித்தரிக்க முடியும். ஓவியங்களை வைத்துக் கொண்டு இது தான் உண்மை என்று சொல்லும் பீஜே போன்றவர்கள் கடைசியில் அவமானத்தில் தலை குனியவேண்டியது தான்.

5) இயேசுவின் திருமணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

டாவின்சியின் ஓவியம் பற்றியும், பீஜே அவர்களின் விமர்சனம் பற்றியும் பல விவரங்களைக் கண்டோம். ஓவியர்களை நம்பி களத்தில் குதிக்கும் பீஜே போன்றவர்கள் சந்திக்கும் சவால்களையும் கண்டோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு தங்களுடைய மணவாளன் என்று சொல்கிறார்கள். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது, திருச்சபை ஒரு மணவாட்டி போல அளங்கரிப்படுவாள் என்றும், இயேசு மணவாளன் போல அந்த திருச்சபையைக் கண்டு மகிழுவார் என்றும் பைபிள் சொல்கிறது. ஆனால், சில மேற்கத்திய நாவலாசியர்களும், பீஜே போன்ற இஸ்லாமியர்களும் சொல்வது போல, இந்த பூமியில் இயேசு வாழ்ந்த போது அவருக்கு திருமணம் நடந்ததா? அவருடைய மனையாக மகதலேனா மரியாள் இருந்தார்களா?  உண்மையாகவே, இயேசுவிற்கு குடும்ப வாழ்க்கை அவசியமானதாக இருந்ததா? என்பதை சுருக்கமாக காண்போம். 

அ) இயேசுவின் வருகையின் நோக்கம்:

இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி போல வரவில்லை, அவர் மேசியாவாக உலக மக்களை இரட்சிக்க வந்தார்,  தன் உயிரை கொடுக்க வந்தார். இதைப் பற்றி இயேசு சொல்வதை படியுங்கள்:

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மாற்கு 10:45 )

மரிப்பதற்கு நான் வந்தேன் என்று சொல்பவர் எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, அவளை பாதியிலேயே அனாதையாக விட்டுச் செல்லமுடியும்? 

(குறிப்பு: முஹம்மது தனக்கு 53 வயதாகும் போது, 9 வயது சிறுமையை திருமணம் செய்துக்கொண்டார். அந்த சிறுமியின் பெயர் ஆயிஷா. 9 வருடங்கள் அப்பெண்ணோடு வாழ்ந்தார். ஆயிஷா 18 வயது இருக்கும்போது, இவர் போய் செர்ந்துவிட்டார்.  ஆயிஷா தனக்கு 64 வயது இருக்கும் போது மரித்ததாக சொல்கிறார்கள்.  அதாவது, கிட்டத்தட்ட  46 ஆண்டுகள் விதவையாக வாழ்ந்தார்கள். இப்படியெல்லாம் இயேசு செய்யமாட்டார்.). 

ஆ) இயேசுவின் குடும்ப நபர்கள் பற்றி பைபிள்:

அனேக இடங்களில் இயேசுவின் குடும்ப நபர்கள் பற்றியும், அவரது ஊழியத்தில் உதவின சகோதர சகோதரிகள் பற்றியும் பைபிள் பல இடங்களில் குறிப்பிடுகின்றது (மத்தேயு 12:46, 47; மாற்கு 3:31, 32; 15:40; லூக்கா 8:2, 3, 19, 20; யோவான் 19:25). ஆனால், ஒரு இடத்திலும் அவரது மனைவி இருந்தார்கள், அந்த மனைவியின் பெயர் இது தான் என்று பைபிள் குறிப்பிடவில்லை. ஏன் இப்படி பைபிள் சொல்லவில்லை என்று சிந்தித்தால், உண்மையாகவே அவருக்கு மனைவி இருந்ததில்லை என்பது தான் பதிலாகும்.

இ) அதி முக்கியமான விஷயத்தை ஏன் பைபிள் சொல்லவில்லை?

இயேசுவைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லும் பைபிள்,  இயேசுவிற்கு திருமணமாகியிருந்தால், அதைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருக்குமா?  இயேசுவின் தாய் யார், வளர்ப்பு தந்தையார், உறவினர்கள் யார் என்று சொல்லும் பைபிள் அவருக்கு மனைவி இருந்திருந்தால், அதை சொல்லாமல் விட்டு இருந்திருக்காது. 

ஒரு தீர்க்கதரிசி திருமணமானவராக இருப்பது பாவமில்லையே! பைபிள் திருமணத்திற்கு எதிரானதும் இல்லையே, அப்படி இருக்கும் போது, இயேசுவிற்கு உண்மையாக திருமணாகி இருந்தால், பைபிள் நமக்கு தெரிவித்து இருக்கும். 

இயேசுவின் சீடர்களும் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை, காரணம் என்னவென்றால், இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதுதான் உண்மை.

ஈ) பழைய ஏற்பாடும் மேசியாவின் குடும்பம் பற்றி ஒன்றும் சொல்வதில்லை

மேசியாவின் வருகையை பற்றியும், அவர் படும் பாடுகள் பற்றியும், அவரது இரண்டாம் வருகையைப் பற்றியும், பல விஷயங்களை பழைய ஏற்பாடு சொல்கிறது, ஆனால் அவருக்கு திருமணம் ஆகும் என்றும், அவருக்கு குடும்பம் இருக்கும் என்றும் சொல்லவில்லை, ஏனென்றால், அவர் ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல, தீர்க்கதரிசிகளைவிட மேலானவர், அவர் கர்த்தர், அவர் தேவனின் வார்த்தையாக இருக்கிறார். அவருக்கு திருமணம் என்பது தேவையற்றது. அல்லாஹ்விற்கு திருமணமும், மனைவியும் தேவையா? மனிதர்களுக்குத் தான் இவைகள் தேவை தேவனுக்கு தேவையில்லை. ஆகையால், பழைய ஏற்பாடு இதைப் பற்றி சொல்வதில்லை. 

ஏசாயா புத்தகத்திலிருந்து சில வசனங்களை மட்டும் இப்போது படிப்போம்.  இயேசு ஏன் வந்தார் என்பதை சரியா புரிந்துக்கொள்ள, தேவனின் இரட்சிப்பின் தட்டத்தை இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட வசனங்கள் சொல்வதை பாருங்கள். இப்படிப்பட்ட ஊழியத்திற்கு வருபவர், எப்படி திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் நடத்துவார்? பீஜே அவர்கள் சிந்திக்கட்டும்.

ஏசாயா 53:2  இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 53:3  அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். 53:4  மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 53:5  நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 53:6  நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். 53:7  அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். 53:8  இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். 53:9  துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 53:10  கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

உ) தாயை பராமரிக்க ஆயத்தப்படுத்தியவர், மனைவி பிள்ளைகளை பராமரிக்க ஆயத்தமாக்கமாட்டாரா?

இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, தன் பிரியமான சீடன் யோவானிடம் தம்முடைய தாயை பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிடுகிறார். அதே இடத்தில் மகதலேனா மரியாளும் இருக்கிறார்கள், அவர்களை பராமரிக்கும் படி இயேசு எதையும் செய்யவில்லை.   இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், மகதலேனா மரியாள் மனைவியாக அல்ல  அதற்கு பதிலாக, ஒரு நல்ல சீடராக இருந்தார்கள் என்பதாகும்.  பார்க்க யோவான் 19:25-27.

19:25  இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள். 

19:26  அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 

19:27  பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

6) மகதலேனா மரியாள் விஷயத்தில் “அல்லாஹ்வை பொய்யராக்கும்” பீஜே 

இந்த வரிகளை படிப்பவராகிய நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால், நிச்சயமாக அடுத்த சில வரிகளை கட்டாயம் படியுங்கள். 

பைபிளை தாக்கிப் பேசும் ஒவ்வொரு முஸ்லிமும், தனக்குத் தெரியாமலேயே, தன் கைகளால் இஸ்லாமுக்கு கல்லறையை கட்டுகிறார். இதனை முஸ்லிம்கள் அறிவதில்லை.   உதாரணத்திற்கு, பீஜே அவர்களின் இந்த வரிகளை படியுங்கள்:

 // பீஜே அவர்கள் கொடுத்த பதில்: 

. . . இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். . . //

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அல்ல, அவர் உயிர்த்தெழுந்த பிறகு வந்து பார்த்தவர்களில் அல்லது இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் பேசிய  பெண், மகதலேனா மரியாள் ஆவார்கள்.  பார்க்க யோவான் 20:16-18

20:16  இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 

20:17  இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 

20:18  மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள். 

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, முதலில் பேசியது மகதலேனா மரியாள் என்பதால், அவர் இயேசுவின் மனைவியாக இருக்கிறார் என்று நீங்கள் (பீஜே) சொல்கிறீர்கள். உங்களுடைய இந்த லாஜிக் உண்மையாக இருந்தால், நீங்கள் இன்றே இஸ்லாமை விட்டு வெளியேறவேண்டும்.  காரணம் என்ன? மேற்கொண்டு படியுங்கள்.

குர்-ஆனின் படி சிலுவையில் இயேசுவை அறைவதற்கு முன்பே, அல்லாஹ் ஒரு மாயை செய்து, யாருக்கும் தெரியாமல், இயேசுவை தன்னிடத்தில் எடுத்துக்கொண்டார். வேறு ஒரு நபரை இயேசுவைப்போல் காண்பித்துவிட்டார். அந்த நபர் தான் சிலுவையில் அறையப்பட்டார்.  பார்க்க குர்-ஆன் 4:156,-158 (உங்கள் தமிழாக்கம் தான், ஒரு முறை படித்துவிடுங்கள், பீஜே அவர்களே!)

4: 56, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26

158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133

ஒரு புறம் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று சொல்கிறீர்கள், இன்னொரு பக்கம், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலாவது காணப்பட்டது மகதலேனா மரியாளுக்கு என்று சொல்கிறீர்கள். உங்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனைகள் உங்களுக்கு தெரிகின்றதா?

குர்-ஆனின் படி இயேசு உயிர்த்தெழவில்லை, பீஜேயின் படி, இயேசு உயிர்த்தெழுந்தார்.

குர்-ஆனின் படி, இயேசு சிலுவையிலேயே அறையப்படவில்லை, பீஜேயின் படி, இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, மகதலேனா மரியாளுக்கு காணப்பட்டு பேசினார்.

இப்போது தமிழ் முஸ்லிம்கள் யாரை நம்புவது? குர்-ஆன் சொல்வதை நம்பவேண்டுமா? அல்லது பீஜே அவர்கள் சொல்வதை நம்பவேண்டுமா? ஒன்றை ஒன்று முரண்படுகின்றது.

இயேசு சிலுவையில் அறையப்படவில்லையென்றால், அவர் எப்படி உயிர்த்தெழமுடியும்? அவர் எப்படி மரியாளுக்கு காணப்படமுடியும்?

குர்-ஆனின் படி, இயேசுவை சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாகவே, அவரை அல்லாஹ் எடுத்துக்கொண்டார், அப்படியானால், அவர் மறுபடியும் பூமியில் எப்படி மரியாளுக்கு காணப்பட்டார்?

பீஜே அவர்களின் “இயேசுவிற்கு திருமணமானது” என்ற பதில் உண்மை என்று நாம் ஏற்றுக்கொண்டால், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று குர்-ஆன் சொல்வது பொய்யாகும்.  இவ்வளவு சீக்கிரமாக பீஜே அல்லாஹ்விற்கு அல்வா கொடுப்பார் என்று யாரும் எதிர்ப்பார்த்து இருந்திருக்கமாட்டார்கள்.  ஒன்றை கடைசியாகச் சொல்லிக்கொள்கிறேன், கடந்த சில ஆண்டுகளாக, முஸ்லிம்கள் பைபிளை தாக்கி எழுத ஆரம்பித்த நாள் முதற்கொண்டு,  இன்று வரை அவர்கள் இஸ்லாமுக்கு கல்லறையை சிறிது சிறிதாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பீஜே போன்றவர்கள் அந்த கல்லறை கட்டும் வேலையை சீக்கிரமாக முடித்துவிடுவார்கள் போல் இருக்கிறது. 

முடிவுரை:

இதுவரை விளக்கியவற்றிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது:

இயேசுவிற்கு திருமணமானது என்று பீஜே அவர்கள் சொன்ன பதிலில் ஆதாரமில்லை.

இஸ்லாமிய நூல்களின் ஆதாரங்களின் படியும், இயேசுவிற்கு திருமணமாகவில்லை என்பது தெளிவாக புரிகின்றது.

முஸ்லிம்கள் ”கலைஞர்களின் ஓவியங்களை, புத்தகங்களை” ஆதரவாக எடுத்துக்கொண்டு பைபிளுக்கு எதிராக எழுதுவது, இஸ்லாமுக்கே ஆபத்தாக முடியும். டாவின்சியை வம்புக்கு இழுத்து, டாவின்சி கோட் என்ற படத்தை துணைக்கு அழைத்துக் கொண்டதால், பீஜே அவர்களும், குர்-ஆனும் சந்திக்கும் சவால்கள், இஸ்லாமுக்கே தலைவலியாக மாறியதைக் கண்டோம்.

பீஜே போன்ற முஸ்லிம்களுக்கு, கிறிஸ்தவர்களின் எச்சரிக்கை மணியாக இந்த விவரங்கள் அமையட்டும்.  ஆய்வு செய்யாமல், பைபிளுக்கு எதிராக, இணையத்தில் எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்.  பதில் தெரிந்தவர்கள், இந்த இரண்டு கட்டுரைகளுக்கு பதில் சொல்லட்டும். 

இந்த இரண்டு தொடர் கட்டுரைகள் பற்றி, முஸ்லிம்கள் கேள்விகள் எழுப்பினால், மறுப்பு எழுதினால், மேலதிக விவரங்கள் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பீஜே அவர்களே, உங்களை அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன், அது வரை இனி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். 

இப்படிக்கு,

உங்கள் சகோதரன் 

உமர்

தேதி: 27-April-2015

பின் குறிப்புகள்: