குர்‍ஆன் 24:61 - உன் வீட்டில் நீ சாப்பிடுவது பாவமில்லை! அல்லாஹ் அள்ளித்தந்த சலுகை

(இந்த கட்டளையை அல்லாஹ் இறக்கும்வரை முஸ்லிம்கள் தெருவில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்)

திடீரென்று ஒரு நாள் ஜிப்ரீல் தூதன் உங்கள் முன் தோன்றி, அல்லாஹ் உங்களுக்காக சில கட்டளைகளை கொடுத்துள்ளான். அதனை நீங்கள் நிச்சயம் கடைபிடிக்கவேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? உங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது அல்லவா! 'சொல்லுங்கள் இறைவன் என்ன சொன்னான்'? என்று உடனே கேட்பீர்கள் அல்லவா!

அதற்கு ஜிப்ரீல் தூதன், இதோ இறைவன் உங்களுக்காக அனுப்பிய கட்டளைக‌ள்:

  • நீங்கள் குருடராக இருந்தால், உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடலாம் இது பாவமில்லை. 
  • நீங்கள் முடவராக இருந்தால், உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடலாம் இது பாவமில்லை. 
  • நீங்கள் சுகமில்லாதவராக இருந்தாலும், நீங்கள் உங்கள் வீட்டில் சாப்பிடலாம் இதில் குற்றமில்லை.
  • உங்கள் தகப்பன் வீட்டில் சாப்பிடலாம், உங்கள் தாய் வீட்டில் சாப்பிடலாம் இது குற்றமல்ல.  
  • உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டில் சாப்பிடலாம், உங்கள் தாயின் சகோதரிகள் வீட்டில் சாப்பிடலாம், இது பாவமாகாது. 
  • அதே போல, உங்கள் நண்பர்கள் வீட்டிலும் சாப்பிடலாம், இது பாவமாகாது. 
  • கடைசியாக, நீங்கள் தனியாகவும் சாப்பிடலாம், சேர்ந்தும் சாப்பிடலாம் இது பாவமாகாது.  

இவைகள் தான் அல்லாஹ் உங்களுக்காக கொடுத்த கட்டளைகள் என்றுச் சொன்னால், உங்களுக்கு எப்படி இருக்கும்? இதனை கேட்டவுடன்,  'இவருக்கு என்ன பையித்தியமா பிடித்திருக்கிறது?' - என்று நீங்கள் நினைப்பீர்கள் அல்லவா? 

ஒரு முட்டாள்தனமான அறிவுரையாக இது தெரிகின்றதல்லவா? என் வீட்டில் நான் சாப்பிடுவதற்கு அல்லாஹ் எனக்கு கட்டளை கொடுக்கவேண்டுமா? பிறந்ததிலிருந்து நான் என் வீட்டில் சாப்பிடாமல் மற்றவர்கள் வீட்டிலா சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்!?  என்று சொல்வீர்கள் அல்லவா? இவர் உண்மை ஜிப்ரீல் தூதனில்லை, இவர் ஒரு வஞ்சகத்தூதன், இவர் பொய் சொல்கிறார் என்று மனதுக்குள் எண்ணுவீர்கள் தானே!

சரி வாருங்கள், குர்‍ஆனிலிருந்து ஒரு வசனத்தை வாசிப்போம்.  ஐந்து குர்‍ஆன் தமிழாக்கங்களிலும், மூன்று ஆங்கில மொழியாக்கங்களிலும் இந்த வசனத்தை வாசிப்போம். கடைசியாக, மூல மொழி அரபியிலும் இவ்வசனத்தின் முதல் வாக்கியத்தின் பொருளை பார்ப்போம். 

[நான் வசனத்தை மாற்றி பொருள் கூறுகிறேன் என்று யாரும் குற்றப்படுத்தக்கூடாது என்பதற்காகவே,  இத்தனை மொழியாக்கங்களில் நாம் இவ்வசனத்தை பார்க்கிறோம்]

குர்‍ஆன் 24:61:

பி.ஜே. தமிழாக்கம்:

24:61. உங்கள் வீடுகளிலோ, தந்தையர் வீடுகளிலோ, அன்னையர் வீடுகளிலோ, சகோதரர்கள் வீடுகளிலோ, சகோதரிகளின் வீடுகளிலோ, தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம்159 கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.376  

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கும்” என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.  

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான ("ஸலாமுன்" என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே இறைவன் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

24:61. குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆனால், நீங்கள் உங்களின் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளிலோ, உங்கள் அன்னையரின் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது உங்கள் சிறிய தந்தை பெரிய தந்தையரின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் சிற்றன்னை, பெரியன்னையரின் வீடுகளிலோ அல்லது எந்த வீடுகளின் திறவுகோல்கள் உங்கள் பொறுப்பில் உள்ளனவோ அந்த வீடுகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வீடுகளிலோ சாப்பிடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவதிலும் உங்கள் மீது குற்றமில்லை. எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும்போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் இறைவனிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதும், பாக்கியங்கள் கொண்டதும், தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்தித்துணர்ந்து செயல்படக்கூடும்!

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

24:61. (விசுவாசிகளே! உங்களுடன் சேர்ந்து உண்ணுவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, நீங்கள் உங்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையுடைய சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையுடைய சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயுடைய சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது எ(ந்)த (வீட்டி)ன் சாவிகளை நீங்கள் உடமையாக்கிக் கொண்டீர்களோ, அவற்றிலோ, அல்லது உங்கள் தோழர்களிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை, நீங்கள் (பலர்) ஒன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ உண்பது உங்கள் மீது குறறமில்லை, ஆகவே, நீங்கள் வீடுகளில் நுழைந்தால், அல்லாஹ்விடமிருந்துள்ள பரிசுத்தமான பாக்கியமுள்ள காணிக்கையாக உங்களின் மீது நீங்கள் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள், நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறு அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்.

ஆங்கில மொழியாக்கம்:  Quran 24:61

Yusuf Ali Translation:

24:61. It is no fault in the blind nor in one born lame, nor in one afflicted with illness, nor in yourselves, that ye should eat in your own houses, or those of your fathers, or your mothers, or your brothers, or your sisters, or your father's brothers or your father's sisters, or your mohter's brothers, or your mother's sisters, or in houses of which the keys are in your possession, or in the house of a sincere friend of yours: there is no blame on you, whether ye eat in company or separately. But if ye enter houses, salute each other - a greeting of blessing and purity as from Allah. Thus does Allah make clear the signs to you: that ye may understand.

Talal Itani Translation:

24: 61. There is no blame on the blind, nor any blame on the lame, nor any blame on the sick, nor on yourselves for eating at your homes, or your fathers’ homes, or your mothers’ homes, or your brothers’ homes, or your sisters’ homes, or the homes of your paternal uncles, or the homes of your paternal aunts, or the homes of your maternal uncles, or the homes of your maternal aunts, or those whose keys you own, or the homes of your friends. You commit no wrong by eating together or separately. But when you enter any home, greet one another with a greeting from God, blessed and good. God thus explains the revelations for you, so that you may understand.

SAHIH INTERNATIONAL

24:61 There is not upon the blind [any] constraint nor upon the lame constraint nor upon the ill constraint nor upon yourselves when you eat from your [own] houses or the houses of your fathers or the houses of your mothers or the houses of your brothers or the houses of your sisters or the houses of your father's brothers or the houses of your father's sisters or the houses of your mother's brothers or the houses of your mother's sisters or [from houses] whose keys you possess or [from the house] of your friend. There is no blame upon you whether you eat together or separately. But when you enter houses, give greetings of peace upon each other - a greeting from Allah, blessed and good. Thus does Allah make clear to you the verses [of ordinance] that you may understand.

தமிழாக்கம் செய்தவர்களின் வஞ்சனை:

குர்‍ஆனின் 24:61ம் வசனத்தில் அல்லாஹ்வின் மதியீனம் வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றது. இதனை கவனித்த குர்‍ஆன் தமிழாக்கம் செய்தவர்களாகிய‌:

  1. முஹம்மது ஜான், 
  2. அப்துல் ஹமீது பாகவி, 
  3. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மற்றும் 
  4. மன்னர் ஃபஹத் வளாகம் அச்சிட்ட தமிழாக்கம்

போன்றவர்கள், ஒரு வஞ்சகமான அடைப்புக்குறிகள் இட்டு, அல்லாஹ்வை காப்பாற்ற முயன்றுள்ளனர். இவ்வசனத்தை பிஜே அவர்கள் அரபிக்கு மிகவும் நெருக்கமான மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் அறிவீனமான கட்டளைகள்:

குர்‍ஆனில் அல்லாஹ்வின் ஞானம் இருக்கிறது, விஞ்ஞானம் இருக்கிறது, மெய்ஞானம் இருக்கிறது. அல்லாஹ்வைப்போல வசனங்களை செய்திகளை சொல்பவர் யாருமில்லை என்று முஸ்லிம்கள் குர்‍ஆனை மெச்சிக்கொள்வார்கள். ஆனால், இந்த ஒருவசனத்தை கவனிக்கும் போது நமக்கு சிரிப்பும், கோபமும் தான் வருகிறது.

மேற்கண்ட தமிழாக்கத்தைச் செய்தவர்கள், இந்த வசனத்தில் இருக்கின்ற பிரச்சனையையும், அல்லாஹ்வின் அறிவீனமான கட்டளைகளையும் கவனித்துள்ளார்கள். இதனை மறைப்பதற்காக, அடைப்பிற்குள் கீழ்கண்டவாறு எழுதி தங்களால் இயன்றவரை வாசகர்களுக்கு காதுகுத்த முயன்றுள்ளார்கள்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; . . .

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; . . .

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

24:61. குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. . . .

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

24:61. (விசுவாசிகளே! உங்களுடன் சேர்ந்து உண்ணுவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, . . .

அரபி மூல மொழியில் இவ்வசனம் மேற்கண்ட தமிழாக்கங்கள் போல இல்லை. இவ்வ‌சனத்தின் பொருள் அறிவுடையோர்கள் ஏற்காதவண்ணமாக இருப்பதால், முதல் இரண்டு வரிகளில் சில விவரங்களை சொந்தமாக சேர்த்துவிடலாம் என்று எண்ணி, இப்படி தில்லுமுல்லு செய்துள்ளார்கள், இஸ்லாமிய அறிஞர்கள்.  

இது ஒரு புறமிருக்கட்டும்,  குர்‍ஆன் தமிழாக்க அறிஞர்களின் வஞ்சக வாசகத்தை அப்படியே அங்கீகரித்தாலும், ஒரு குருடர், முடவர் முஸ்லிம்களோடு உண்பது பாவம் என்று யார் சொன்னார்கள்? திடீரென்று அல்லாஹ் வந்து இப்படி சாப்பிடுவது பாவமில்லை என்று சொல்வதற்கான காரணம் என்ன? குர்‍ஆன் தமிழாக்கம் செய்தவர்கள் பதில் சொல்வார்களா? 

இவ்வளவு முயன்ற இவர்கள், இவ்வசனத்தின் மீதமுள்ள  எழுத்துக்களை மாற்றமுடியாமல் விட்டுவிட்டனர். ஒரு மனிதன் தன் வீட்டில் சாப்பிட அவனுக்கு அல்லாஹ் கட்டளை கொடுக்கவேண்டுமா?  இந்த வசனத்தை அல்லாஹ் இறக்குவதற்கு முன்பு வரை முஸ்லிம்கள் தங்கள் சொந்த வீடுகளில் சாப்பிட்டது பாவமாக கருதினார்களா? தங்கள் பெற்றோர்களின் வீட்டில் சாப்பிடுவதும், சகோதர சகோதரிகளின் வீடுகளில் சாப்பிடுவதும் பெரிய பாவமாக முஸ்லிம்கள் எண்ணினார்களா? இது எப்படிப்பட்ட ஞானம்!?

அல்லாஹ் சொன்னதைப்போல, யாராவது தங்கள் வேதங்களில் இப்படி இறைவன் சொன்னதை காட்டமுடியுமா?

பீஜே அவர்களின் விளக்கம் - பிறர் வீடுகளில் சாப்பிடுதல் (விளக்கம் 376):

வசனத்தை சரியாக மொழியாக்கம் செய்த  பீஜே அவர்கள், அதில் சொல்லப்பட்ட முக்கியமான அல்லாஹ்வின் ஞானம் பற்றி விளக்குவதை விட்டுவிட்டு, பிறரது வீடுகளில் சாப்பிடுவது பற்றி இவ்வசனம் சொல்கிறது என்றுச் சொல்லி, வேறு விளக்கத்தை கொடுத்துள்ளார். தலையை விட்டுவிட்டு, வாலை பிடித்து ஆட்டுகின்றார் பீஜே. அல்லாஹ்வின் ஞானப்பிழையை மறைக்க‌ வேறுவகையில் முயன்றுள்ளார் பீஜே.  எது எப்படியோ! எல்லா முஸ்லிம் அறிஞர்களும் குர்‍ஆனை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளார்கள் என்பது மட்டும் புரிந்துக் கொள்ளமுடிகின்றது.

அரபி மூல மொழியில்: 

“வீடுகளில் சாப்பிடுவது” பற்றி வரும் வார்த்தைகள் அரபி மூல மொழியில் எங்கே வருகின்றது என்பதை கவனிக்கவும். 

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; . . .

நம் தமிழ் மொழியாக்கங்கள் செய்த பிழை என்னவென்று மூல மொழியில் பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்.

முடிவுரை:

இதுவரை குர்‍ஆனில் அல்லாஹ் சொன்ன தேவையில்லாத, அறிவீனமான கட்டளைப் பற்றிப் பார்த்தோம். தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் செய்த தில்லுமுல்லு என்னவென்றும் பார்த்தோம்.

குர்‍ஆன் என்பது ஞான ஊற்று என்று பெருமையாகப் பேசும் முஸ்லிம்களிடம் சுருக்கமாக கேட்க விரும்பும் கேள்விகள்: 

  • உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிட உங்களுக்கு அல்லாஹ் கட்டளை தரவேண்டுமா? 
  • உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடுவது குற்றமாகுமா? பாவமாகுமா?
  • ஒருவர் தன் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் வீட்டில் சாப்பிட அல்லாஹ் அனுமதி தரவேண்டுமா?

இப்படிப்பட்ட ஞானம் உலகத்தில் வேறு யாரிடமாவது பார்க்கமுடியுமா? முஸ்லிம்களே, சிந்தியுங்கள். உங்களுக்கு கேள்விகள் இருந்தால் எனக்கு அனுப்புங்கள்.


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்