சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

பாகம் 2

முன்னுரை:

இத்தொடர் கட்டுரைகளின் அறிமுகத்தை முதல் பாகத்தில் படித்துவிட்டு, இந்த இரண்டாம் தொடரை படிக்கவும். 

முதல் பாகத்தில் ”தாடி, தலைமுடி, மீசை, வேட்டி மற்றும் செருப்பு” போன்ற அற்பமான விஷயங்களில் முஸ்லிம்கள் எப்படி முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளவேண்டும் என்று முஹம்மது கற்றுக்கொடுத்தார் என்பதை ஆய்வு செய்தோம்.

இந்த இரண்டாம் தொடரில் இன்னும் எந்தெந்த விஷயங்களில் முஸ்லிம்களின் மனதில் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான விஷ வாயுவை இஸ்லாம் செலுத்தியுள்ளது என்பதைக் காண்போம். இந்த விவரங்களை முஸ்லிம்கள் படிப்பதினால் அவர்களது மனது  புண்படலாம், ஆனால் அதற்கு காரணம் இஸ்லாம் தான். நீங்கள் மேற்கொண்டு ஏதாவது உறுப்படியாக செய்யவேண்டுமென்று விரும்பினால், இந்த தொடர்களில் கொடுக்கப்படும் இஸ்லாமிய ஆதாரங்களை  ஆய்வு செய்து, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேள்வி கேட்டுப் பாருங்கள். 

பாகம் 2

சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளை பார்க்கும் போது, ”இந்துக்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் அதாவது முஸ்லிமல்லாதவர்களிடம்” மனித நேயத்தோடு நடந்துக் கொள்ளுங்கள் என்று முஸ்லிம்களுக்கு இஸ்லாம் போதிக்கிறது என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. 

முஸ்லிமல்லாதவர்களுக்கு உதவி செய்யும் படி இஸ்லாம் போதிக்கின்றது என்றுச் சொல்பவர்கள் அதற்கான ஆதாரங்களை குர்-ஆனிலிருந்து காட்டவேண்டும். ஆனால், இதற்கு எதிராக அனேக ஆதாரங்களை இஸ்லாமில் காணலாம். முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக் கொள்ளுங்கள் என்று முஹம்மது அனேக கட்டளைகளை கொடுத்துள்ளார். இக்கட்டுரையில் இதைப் பற்றிய இன்னொரு ஹதீஸைக் காண்போம்.

முஸ்லிமல்லாதவர்களிடம் காட்டும் வெறுப்புணர்வின் வெளிப்பாடு

முஸ்லிம்களே! முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலில் முகமன் (ஸலாம்) சொல்லாதீர்கள்

ஒருவர் இன்னொருவரைக் காணும் போது, ஹலோ அல்லது வணக்கம் என்றுச் சொல்வது சாதாரண விஷயம். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை காணும் போது, ”அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்”  என்றுச் சொல்வார்.   ஒரு முஸ்லிம், ஒரு இந்துவையோ, கிறிஸ்தவனையோ வழியில் காணும் போது,  எப்படி முகமன் (வணக்கம்) சொல்லவேண்டும்?  இதைப் பற்றி முஸ்லிம்களின்  வழிகாட்டி முஹம்மது என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376

மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது இரண்டு (அருமையான!) அறிவுரைகளை முஸ்லிம்களுக்கு கொடுத்துள்ளார்.  இவ்விரண்டு அறிவுரைகளும் மாற்று  மதத்தவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றன. இவ்விரண்டு அறிவுரைகளும் முஸ்லிம்களின் மனதில் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடியவைகளாக உள்ளன. இக்கட்டுரையில் முதல் அறிவுரையைப் பற்றி ஆய்வு செய்வோம்.

குறிப்பு: யூதர்கள் முஹம்மதுவிற்கு ஸலாம் சொல்லும் போது, “உங்கள் மீது மரணமுண்டாகட்டும் – அஸ்ஸாமு அலைக்கும்” என்று சொல்வார்கள், அதற்கு முஹம்மதுவும் “உங்கள் மீதும்” என்றும் சொல்வார். பதிலுக்கு பதில் சரியாக அமைந்துவிடும். யாராவது இப்படி வாழ்த்து கூறினால், நீங்கள் இப்படியே சொல்லுங்கள் என்று அவர் கற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், இந்த தொடரில் நாம் ஆய்வு செய்யப்போவது இந்த விவரமல்ல, முதலாவது முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா இல்லையா என்பது தான்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலில் முகமன் கூறாதீர்கள் -  நல்ல மனிதர்களை கெடுக்க முயலும் இறைத்தூதர்:

ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் ஏற்கனவே தங்கள் நம்பிக்கைகளினால் பலவகையாக பிரிந்து கிடக்கிறார்கள்.  என் இறைவன் தான் பெரியவன், உன் இறைவன் அப்படி இல்லை, என் மதம் தான் சரியானது, உன் மதம் தவறானது என்று மக்கள் நினைத்துக் கொண்டு வாழுகிறார்கள். 

இந்த நிலையில் மக்கள் இருக்கும் போது, நீங்கள் மாற்று மதத்தவர்களுக்கு முதலில் வணக்கம் சொல்லாதீர்கள் என்று ”முஹம்மது” கட்டளையிடுவது எவ்வளவு கீழ்தரமானது?  நண்பர்களும், உறவினர்களும் பல காரணங்களுக்காக சில காலம் பிரிந்து இருந்தாலும், இவர்களில் யாராவது ஒருவர் சுயமாக முன்வந்து, மற்றவருக்கு வணக்கம் சொல்லி, நலம் விசாரித்தால், பழைய பகையையெல்லாம் மறந்து மறுபடியும் நட்பு கொண்டு ஒற்றுமையாக வாழ்வதை நாம் அவ்வப்போது நிஜவாழ்க்கையில் காண்கிறோம்.  இதேயே முஹம்மது முஸ்லிம்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்,  அதாவது முஸ்லிம்களில் இருவர் மனஸ்தாபம் கொண்டு பிரிந்து இருந்தால், அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் அவர்களின் பிரிவு இருக்கக்கூடாது. இவர்களில் யார் அடுத்தவரை முதலில் சந்தித்து ஸலாம் கூறுகிறாரோ, அவர் தான் சிறந்தவர் என்று முஹம்மது முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் (பார்க்க ஸஹீஹ் புகாரி நூல் எண் 6077). இந்த கட்டளை முஸ்லிம்களுக்கு மட்டுமே, முஸ்லிமல்லாதவர்களுக்கு இல்லை, இதனை இஸ்லாமிய அறிஞர்கள் மறுத்தால் விளக்கம் தரவும். 

தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்ளும் முஸ்லிம்களின் நிரந்தர வழிகாட்டியாகிய முஹம்மது சொல்லும் அறிவுரையை நன்றாக கவனித்துப் பாருங்கள்.   

இப்படிப்பட்ட அறிவுரைகளை படிக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் மாற்று மத மக்களைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாகும்?

  • எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் ஒன்றைச் சொன்னால், அது சரியாகத் தான் இருக்கும்.
  • முஹம்மது ”ஆம்” என்றால் ”ஆம்”, அவர் ”இல்லை” என்றால் ”இல்லை” – இது தான் முஸ்லிம்களின் உயிர் மூச்சு.
  • முஸ்லிமல்லாதவர்கள் மீது முஹம்மதுவிற்கு எவ்வளவு வெறுப்புணர்வு இருந்தால், இப்படி முதலாவது நீங்கள் முகமன் சொல்லாதீர்கள் என்றுச் சொல்வார்?
  • இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏன் ஈவு இரக்கமில்லாமல், முஸ்லிமல்லாதவர்களை கொல்கிறார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட இஸ்லாமிய கட்டளைகளே காரணம் என்பதை புரிந்துக் கொள்ள முடிகின்றதா?
  • முதலாவது ஒரு முஸ்லிம், முஸ்லிமல்லாதவனுக்கு வணக்கமோ, ஸலாமோ சொன்னால், அவனுக்கு என்ன குறைந்துவிடும்? அவன் வாயிலிருந்து முத்துக்கள் உதிர்ந்துவிடுமா? இதனால் அல்லாஹ்விற்கு என்ன தீமை நடந்துவிடும்? 
  • சக மனிதனுக்கு ஜாதி பார்க்காமல், ”முதலாவது வாழ்த்துக்கள் சொல்வதற்கும்” தடைவிதிக்கும் இஸ்லாமை பின்பற்றும் அதே முஸ்லிம்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து சென்னையில் ஜாதி மதம் பார்க்காமல் எப்படி உதவி செய்தார்கள்? இது எப்படி சாத்தியம்?  இவர்கள் முஹம்மதுவையும் அவரது போதனைகளையும் புறக்கணித்தவர்களா?

இந்த வாழ்த்துதல் சொல்வதைப் பற்றி இதர இஸ்லாமிய விவரங்களை இப்போது காண்போம். படிக்கும் போது சிரிப்பு வந்துவிட்டால், சிரித்துவிடுங்கள், அதன் பிறகு இஸ்லாம் பற்றி சிந்தியுங்கள், நம் தமிழ் முஸ்லிம்களின் நிலைப்பற்றியும் சிந்தியுங்கள்.

1) என் வாழ்த்துதலை எனக்கு திருப்பி கொடுத்துவிடு:

ஆரம்ப கால முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை கவனியுங்கள். சிறு பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டால், ‘நான் நேற்று கொடுத்த சாக்லெட் திரும்ப கொடுத்துவிடு’ என்று கேட்பது போல் இருக்கிறது.

அப்துர்ரஹ்மான் கூறினார்: “இப்னு உமர் ஒரு கிறிஸ்தவரை கடந்துச் சென்றார். அந்த கிறிஸ்தவர் இப்னு உமருக்கு வாழ்த்து கூறினார், உடனே இப்னு உமரும் அவருக்கு திரும்ப வாழ்த்து கூறினார். அதன் பிறகு இப்னு உமருக்கு ‘அந்த நபர் ஒரு கிறிஸ்தவர்’ என்று அறிவிக்கப்பட்டபோது, உடனே இப்னு உமர் திரும்பச் சென்று அந்த கிறிஸ்தவரிடம் “என்னுடைய வாழ்த்துதலை திரும்ப கொடுத்துவிடு” என்று கேட்டார். (இமாம் புகாரியின் ‘அல்-அதப் அல்-முஃப்ரத்’ எண்: 1115)

521. When someone greets a Christian whom he does not recognise

1115. 'Abdu'r-Rahman said, "Ibn 'Umar passed by a Christian who greeted him and Ibn 'Umar returned the greeting He was told that the man was a Christian. When he learned that, he went back to him and said, 'Give me back my greeting.'" (Al-Adab Al-Mufrad - Imam Al-Bukhari (Rahimullaah) - Translation by Ustadah Aisha Bewley)

2) ஒரு கிறிஸ்தவனுக்கு எப்படி வாழ்த்து கூறுவது? சொல்லிய வாழ்த்தை மாற்றுவது ஏன்?

முஸ்லிம்களின் மனதில் எப்படிப்பட்ட விஷவாயு பரவியிருந்தது என்பதை எடுத்துக் காட்டும் இன்னொரு உதாரணம். ஆனால் நம் தமிழ் முஸ்லிம்களைப் பாருங்கள், எவ்வளவு மனித நேயத்தோடு நமக்கு உதவி செய்துள்ளார்கள்!  இந்த கீழ்கண்ட ஹதீஸில், ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்தவருக்கு வாழ்த்தை கூறுகிறார்,  அவர் கிறிஸ்தவர் என அறிந்து, தான் கூறிய வாழ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய வாழ்த்தைக் கூறினார்.

520. ஒரு திம்மி (கிறிஸ்தவனுக்கு) எப்படி வாழ்த்து கூறுவது? 

1112. ”உக்பா இப்னு அமிர் அல் ஜுஹானி” ஒரு மனிதரைக் கடந்துச் சென்றார். ஒரு முஸ்லிமைப்போல தோற்றமளித்த இவர் உக்பாவிற்கு வாழ்த்து கூறினார். உடனே உக்பா மறுமொழியாக “உங்கள் மீதும் சமாதானம் உண்டாவதாக, இன்னும் அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும் உங்கள் மீது உண்டாகட்டும்” என்று வாழ்த்து கூறி சென்றுவிட்டார்.  உக்பாவின் அடிமை “அவர் ஒரு கிறிஸ்தவர்” என்று உக்பாவிற்கு அறிவித்தார்.  உடனே உக்பா எழுந்து அந்த கிறிஸ்தவரை சந்திக்கும் வரை வந்த வழியே சென்றார். அவர் அந்த கிறிஸ்தவரை சந்தித்ததும் “அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது. எனவே உனக்கு கூறிய வாழ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டு, வேறு வகையான வாழ்த்தைக் கூறுகிறேன், “உங்களுக்கு அல்லாஹ் நீடித்த ஆயுளும், பிள்ளைச் செல்வங்களும், இதர செல்வங்களும் கொடுப்பானாக” என்றுச் சொன்னார்.

520. How to make supplication for a dhimmi

1112. 'Uqba ibn 'Amir al-Juhani passed by a man who looked like a Muslim who greeted him. 'Uqba answered him, saying, "And on you and the mercy of Allah and his blessings." His slave said to him, "He is a Christian." 'Uqba got up and followed him until he caught up to him. He said, "The mercy of Allah and His blessings are for the believers, but may Allah make your life long and give you much wealth and many children." (Al-Adab Al-Mufrad - Imam Al-Bukhari (Rahimullaah) - Translation by Ustadah Aisha Bewley)

மேற்கண்ட விவரம் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஏன் உக்பாவின் அடிமை “அவர் ஒரு கிறிஸ்தவர்” என்றுச் சொன்னார்? கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் பற்றிய வாழ்த்துச் சொல்லக்கூடாது என்று இந்த அடிமைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததா? அப்படியானால், இதனை முஹம்மது சொல்லாமல் எப்படி அவருக்கு தெரிந்திருக்கும்? அவர் கிறிஸ்தவர் என்று தெரிந்தவுடன், உக்பா விஷயத்தை (தன் தவறை) புரிந்துக்கொண்டு, உடனே திரும்பிச் சென்று வேறு வகையான வாழ்த்தைச் சொன்னதிலிருந்து, இஸ்லாம் எப்படிப்பட்ட எண்ணங்களை முஸ்லிம்களின் மனதில் விதைத்திருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளமுடிகின்றது! இஸ்லாமின் இறையியல் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக இருந்தால், எப்படி அவர்கள் அல்லாஹ்வை தெய்வமென்று அறிந்து அவரை தொழுதுக் கொள்ளமுடியும்? அல்லாஹ்வின் அருள் இல்லாமல், எப்படி கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கமுடியும்? ஏன் இப்படியெல்லாம் முஹம்மது போதனை செய்து முஸ்லிம்களின் மனதில் முஸ்லிமல்லாதவர்கள் பற்றி தீய எண்ணங்களை விதைத்திருக்கிறார்?

தற்கால தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள், ”ஸலாம்” பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்?

அ) புறக்கணிக்கப்பட்ட சலாம்

புறக்கணிப்பட்ட சலாம் என்ற பெயரில் ஒரு கட்டுரை சுவனத்தென்றல் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது (அதன் தொடுப்பு).

இந்த கட்டுரையில் ஏன் முஸ்லிம்கள் ஸலாம் சொல்லவேண்டும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வது பற்றிய தலைப்பு வரும் போது, ஆசிரியர் கீழ்கண்ட விதமாக கூறி நழுவிவிட்டார். மேலும், நான் மேலே காட்டிய ஹதீஸ் பற்றி முச்சு விடவில்லை.

இக்கட்டுரையின் முன்னுரை இவ்விதமாக உள்ளது:

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

அடுத்தது. . . முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுவது பற்றி இவ்விதமாகச் சொல்லப்பட்டுள்ளது:

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள், வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும். 

இவ்விவரங்களை படிப்பவர்களுக்கு எழும் கேள்விகள்:

  • 14 நூற்றாண்டுகள் தாண்டியும், இன்னும் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா வேண்டாமா? என்ற ஆய்வு நடந்துக்கொண்டே இருக்கிறது! ஒரு சின்ன விஷயத்தில் கூட இன்னும் நீங்கள் ஒருமித்த கருத்துக்கு வரவில்லையா?
  • ஸஹீஹ் முஸ்லிம் எண் 4376ஐ பற்றி, ஏன் இக்கட்டுரையில் விவரிக்கவில்லை? 
  • குர்-ஆன் 4:86ம் வசனத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கத்திற்கு எதிராக, முஹம்மது கூறியுள்ளார் (முஸ்லிம் ஹதீஸில் எண் 4376). குர்-ஆன் சொல்வது தவறா அல்லது முஹம்மது சொல்வது தவறா? 

ஆ) பீஜே குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 159 - ஸலாம் கூறும் முறை:

பீஜே அவர்களின் குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 159ல், பீஜே அவர்கள் ஸலாம் பற்றி பல விவரங்களைக் கொடுத்துள்ளார். அதில் முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐ பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை. 

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர்.

நம்முடைய கேள்வி என்னவென்றால், ”முஸ்லிமல்லாதவருக்கு முதலாவது ஸலாம் சொல்லாதீர்கள்” என்று முஹம்மது ”முஸ்லிம் ஹதீஸில்” சொல்லியுள்ளாரே, அதைப் பற்றி பீஜே அவர்கள் மூச்சுவிடவில்லையே ஏன்?  மாற்று மத சகோதரர்களிடம் சகோதரத்துவத்தை இஸ்லாம் வளர்க்கிறது என்று முஸ்லிம்கள் சொல்வது பொய் அல்லவா? சின்ன விஷயமாகிய ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்ளக்கூடாது என்று முஸ்லிம்களுக்கு முஹம்மது கட்டளையிடுவது  எவ்வளவு கீழ்தரமானது? 

இத்தொடரின் சுருக்கமும், சென்னையில் உதவி புரிந்த முஸ்லிம்களுக்கு கேள்விகளும்:

1) குர்-ஆன் 4:86, தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் என்று கட்டளையிடுகிறது. 

2) ஆனால் முஹம்மதுவோ, யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்க்கும் முதலாவது வாழ்த்துக்கள் சொல்லாதீர்கள் என்று கட்டளையிட்டார்(முஸ்லிம் எண் 4376).

3) ஆரம்ப கால முஸ்லிம்கள், சிறந்த வாழ்த்தை முஸ்லிமல்லாதவர்களுக்கு தவறுதலாக சொன்னாலும், உடனே அதனை திரும்ப பெற்றுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். சில சமயங்களில் வாழ்த்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, வேறு வாழ்த்தைச் சொல்லியுள்ளார்கள். இவைகளை முஹம்மதுவின் மூலமாகவே இவர்கள் அறிந்திருப்பார்கள். இவைகள் சிறுபிள்ளைத் தனமான செயல்களாக காணப்படுகின்றது. 

4) குர்-ஆன் 4:86ம் வசனத்திற்கு எதிராக ஸஹீஹ் முஸ்லிம் 4376 உள்ளது. முஹம்மது எப்படி குர்-ஆன் 4:86க்கு எதிராக போதித்துள்ளார் என்பதை இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது, அதனை இங்கு படிக்கலாம்: குர்-ஆன் மற்றும் சுன்னாவின் படி இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாழ்த்துக்கள் கூறுவது? 

5) இந்த இஸ்லாமிய ஆதாரங்கள் ஒரு புறமிருக்க, தமிழ் முஸ்லிம்கள் இவைகளை புறக்கணித்துவிட்டு, ஜாதி மதம் பேதமின்று உதவிகள் புரிந்துள்ளனர். 

6) இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தமிழ் முஸ்லிம்கள் ஒரே அடியாக இஸ்லாமை புறக்கணித்துவிட்டார்களா? அல்லது இவ்விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்திருந்தும், அவைகளை மறைத்துவிட்டு, இஸ்லாமுக்கு வெளியுலகில் நல்லப்பெயர் கிடைக்கவேண்டுமென்று, நமக்கு உதவிகள் செய்தார்களா?

முடிவுரை:

முஸ்லிமல்லாத அனேகருக்கு மேற்கண்ட விவரங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்! முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் இப்படிப்பட்ட  இன்னொரு பக்கம் இருப்பதை அறியாதவர்கள் அனேகர். இஸ்லாமிய மூல நூல்களை நாம் படித்தால், இஸ்லாமின் அடுத்தபக்கத்தை சரியாக புரிந்துக் கொள்ளலாம்.

அடுத்த தொடர் கட்டுரையில், இதே முஸ்லிம் ஹதீஸ் 4376ல் உள்ள இரண்டாவது பாகத்தைப் பற்றி ஆய்வு செய்வோம்.

சென்னையில் முஸ்லிம்களின் பேருதவி தொடர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்