மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!

ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகள் உலகில் உள்ள முஸ்லிம்கள் மக்காவில் உள்ள காபா என்ற “அல்லாஹ்வின் ஆலயத்திற்கு நேராக” தங்கள் தொழுகையை நிறைவேற்றி தங்கள் பயபக்தியை பறைசாற்றுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்காவிற்கு புனித யாத்திரை செல்கிறார்கள். இவர்களின் இறைவன் “அல்லாஹ்”, அவன் அனுப்பிய தீர்க்கதரிசி ”முஹம்மது”, இவர் பிறந்த பூமி புனித மக்கா, இந்த பூமியில் இருக்கும் இறையில்லம் காபா. இந்த காபாவை பார்த்துக்கொண்டே, நினைத்துக்கொண்டே நகர்கிறது முஸ்லிம்களின் உலக வாழ்க்கைப் பயணம்.

இஸ்லாமையும் மக்காவையும் வேறு பிரித்து பார்க்கமுடியாது. மனித உடலையும் உயிரையும் பிரித்துவிட்டால் என்ன பயன்? மனிதனின் உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்டால், அதன் பிறகு அந்த உடலை  "பிணம்" என்று அழைப்பார்கள். எனவே, இவ்விரண்டும் ஒன்றாக இருந்தால் தான் உயிர் உள்ள மனிதன் என்று சொல்லமுடியும். இது போல, மக்காவும் இஸ்லாமும் உயிரும் உடலும் போன்றது. 

இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒரு கடமை மக்காவிற்கு புனித யாத்திரை செல்வதாகும். இஸ்லாமில் மக்காவின் தனித்தன்மை என்னவென்பதை பாருங்கள்:

  • முஹம்மது பிறந்த இடம் மக்கா 
  • முஹம்மது தம்மை நபியாக சுயபிரகடனம் செய்துக்கொண்ட இடம் மக்கா 
  • ஆபிரகாமும், இஸ்மவேலும் காபாவை கட்டிய இடம்  இடம் மக்கா
  • குர்-ஆனில் அபயபூமியாக அல்லாஹ் அறிவித்த இடம் மக்கா
  • உலக முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் புனிய யாத்திரை (ஹஜ்) செய்யும் இடம் மக்கா 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மக்காவின் பெயர் குர்-ஆனில் ஒரே ஒரு முறைத்தான் வருகிறது என்ற விஷயம் சிலருக்கு ஆச்சரியத்தைத் தரும் (குர்-ஆன் ஸூரா 48:24). மேலும் இன்னொரு இடத்தில் குர்-ஆன் ”பக்கா” என்று குறிப்பிடுகிறது (குர்-ஆன் 3:96). மக்காவின் இன்னொரு பெயர் “பக்கா” என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள். 

மக்கா மற்றும் பெட்ரா

ஒரு சரித்திர ஆசிரியர் பல ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளில் ஆய்வு செய்து, இஸ்லாமின் புனித பூமியாகிய மக்கா பற்றிய தன் ஆய்வின் முடிவை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால்:

இஸ்லாம் மக்காவில் உருவாகவில்லை. இஸ்லாம் ஜோர்டானில் உள்ள பெட்ராவில் முஹம்மதுவினால் தோற்றுவிக்கப்பட்டது. அவருக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, தற்போதுள்ள மக்காவிற்கு அது மாற்றப்பட்டது.” 

இதை படித்தவுடன், என்னைப் பார்த்து:

  • உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
  • அறிவுள்ளவன் எவனாவது இதனை ஏற்றுக் கொள்வானா?
  • கடந்த 1400 ஆண்டுகளாக, பல கோடி முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு நம்பிக்கையை இன்று வந்து இல்லை என்றுச் சொல்வது முட்டாள்தனமானது! 

என்று கேட்கவேண்டும் (திட்டவேண்டும்) என்று உங்களுக்கு தோன்றுகிறதா?

ஆம், இந்த விஷயத்தை முதன்முதலில் படித்த போது எனக்கும் இதே கேள்விகள் தான் எழும்பின. மத நம்பிக்கையும் சரித்திர உண்மைகளும் பலவேளைகளில் மோதிக் கொள்கின்றன. இந்த மோதலை தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்க முடியாது, எனவே, உள்ளே நுழைந்து உண்மை என்னவென்று கண்டறிவது தான் சிறந்தது.

குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய ஆரம்ப கால சரித்திரங்களிலும் “மக்கா” பற்றி சொல்லப்பட்ட புவியியல் மற்றும் இதர விவரங்களை ஆய்வு செய்யும் போது, அவைகள் இன்றுள்ள  மக்காவை குறிக்காமல், ஜோர்டானில் உள்ள பெட்ராவை குறிக்கிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அந்த ஆச்சரியத்திலிருந்து நான் மீளவில்லை என்றுச் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்! 

இஸ்லாம் முதலில் பெட்ரா என்ற பட்டணத்தில் உருவாகி, பின்பு முஹம்மது மரித்த பல ஆண்டுகள் கழித்து மக்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது என்ற விஷயம் முஸ்லிம்களை சிந்திக்கச் செய்யும் விவரமாகும். 

இந்த விவரங்கள் அடங்கிய சரித்திர புத்தக விவரங்கள்:

புத்தகத்தின் பெயர்: குர்-ஆனிக் ஜியோகிரஃபி (குர்-ஆனின் புவியியல்)

(Quranic Geography - A SURVEY AND EVALUATION OF THE GEOGRAPHICAL REFERENCES IN THE QUR'AN WITH SUGGESTED SOLUTIONS FOR VARIOUS PROBLEMS AND ISSUES)

ஆசிரியர்: டென் கிப்சன் (Dan Gibson)

இவர் பல ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து, ஆய்வு செய்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் நபாட்டியன்ஸ் இன மக்களின் சரித்திரத்தை ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம் தான் ”இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது பெட்ரா” என்பதாகும். இதனை மேலும் இவர் ஆய்வு செய்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

  • இப்புத்தகத்தை அமேஜான் தளத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்: அமேஜான் [1] 
  • இப்புத்தகத்தை  பிடிஃப் (PDF) வடிவில் வாங்க சொடுக்கவும்: Quranic Geography PDF 
  • சரித்திர ஆசிரியர் டென் கிப்சன் அவர்களின் தளங்கள்: www.nabataea.net & www.searchformecca.com

இவர் முதல் 15 அத்தியாயங்களில், குர்-ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கூட்டங்களாகிய ஆது, ஸமூது, மத்யன் பற்றி எழுதியுள்ளார். 

இப்புத்தகத்தின் 16 லிருந்து 24வது அத்தியாயம் வரை   பெட்ராவில் உருவான இஸ்லாமும், கிப்லாவும் எப்படி மக்காவிற்கு மாறியது? எப்போது மாறியது? மேலும் குர்-ஆனில் ஹதீஸ்களில் வரும் புவியியல் விவரங்கள் எப்படி பெட்ராவை குறிக்கின்றன போன்றவைகள் பற்றி  பல ஆதாரங்களை முன்வைத்து எழுதியுள்ளார். மொத்தம்158 பக்கங்கள், இதைப் பற்றி ஆசிரியர் ஆய்வு செய்து எழுதியுள்ளார். 

 அத்தியாயங்கள் தலைப்புகள்பக்கம்
Chapter 16The Holy City221
Chapter 17The Qibla238
Chapter 18Archeological Evidence251
Chapter 19Literary Evidence275
Chapter 20Historical Evidence302
Chapter 21Navigation and Pre-Islamic Poetry333
Chapter 22The Abbāsid Writers346
Chapter 23The Case for Aqaba and Al-Aqṣa357
Chapter 24Qur'ānic Geography370-379

புத்தகத்தின் பின் இணைப்பு ’A’ யில் (Appendix A), ஆரம்ப கால இஸ்லாமிய கால அட்டவணையை கொடுத்துள்ளார். அதாவது கி.பி. 550 லிருந்து 1095 வரை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய கிழக்கு அல்லது அரேபியா சுற்றியுள்ள நாடுகளில் நடந்த விவரங்களை தொகுத்து கொடுத்துள்ளார் (பக்கங்கள் 382 – 413 வரை). பின் இணைப்பு ‘C’ யில் (Appendix C), இஸ்லாமுடைய கிப்லா, பெட்ராவிலிருந்து மக்காவிற்கு மாற்றமடைவதற்கு முன்பு எழுதப்பட்ட மூல குர்-ஆன்களில் ஸூராக்கள் 2:143-145 மற்றும் 48:24 பற்றிய ஆய்வை செய்துள்ளார், அவைகளின் முடிவை இப்பகுதியில் கொடுத்துள்ளார். இவைகள் அனைத்தும் அவரது ஆய்விற்கும் அவரது ’இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல’ என்ற கருத்துக்கும் மேலும் வலுசேர்ப்பதாக காணப்படுகிறது. 

16-24 அத்தியாயங்களின் சுருக்கத்தை படிக்க:

இவ்வத்தியாயங்களில் கொடுக்கப்பட்ட விவரங்களின் சுருக்கமான மதிப்புரையை கீழ்கண்ட பிடிஃப் (PDF)ல் படித்து தெரிந்துக் கொள்ளலாம் (24 பக்கங்கள்). ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் இவைகள் கிடைக்கின்றன [இந்த மதிப்புரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது, கூடிய சீக்கிரம் முடிவடைந்துவிடும்].

இந்த பைலை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொண்டு படிக்கலாம்.

உமரின் நிலைப்பாடு: நான் இந்த புத்தகத்தை பிடிஃப் (PDF) வடிவில் வாங்கி படித்தேன். இதனை படிப்பதற்கு முன்பாக, இது அந்த சரித்திர ஆசிரியரின் ஒரு கற்பனையாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், இந்த ஆறாவது பாகத்தை (அத்தியாயங்கள் 16-24 வரை) படித்தவுடன், என் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டது. அவர் முன்வைத்த ஆதாரங்களை கவனிக்கும் போது, இஸ்லாமிய சரித்திரத்தில் குளறுபடிகள் நடந்திருக்கிறது என்று தோன்றியது. எனவே, அவரது புத்தகத்தில் நான் படித்த சில விவரங்களை தமிழ் கட்டுரைகளாக சுருக்கமாக பதிக்கலாம் என்று விரும்புகிறேன். 

தமிழ் முஸ்லிம்கள் அவரது புத்தகத்தை வாங்கி படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேற்கொண்டு நாம் ஆய்வு செய்ய இச்சிறிய தமிழ் கட்டுரைகள் உதவியாக இருக்கும். ஆதார வசனங்களை/விவரங்களை மட்டுமே நான் இந்த புத்தகத்திலிருந்து எடுத்துக் கொள்வேன், மீதமுள்ள வரிகள் அனைத்தும் தமிழ் மக்கள் புரிந்துக் கொள்வதற்காக எழுதப்படும் என் சொந்த வரிகளாகும். நான் புத்தகத்தின் அத்தியாயங்களை அப்படியே மொழியாக்கம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரது புத்தகத்தில் பல படங்கள், அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அவைகள் காப்புரிமை (Copyright) செய்யப்பட்டு இருப்பதினால், அவைகளை பதிக்கமுடியாது, எனவே நீங்கள் புத்தகத்தை வாங்கி படிப்பதே சிறந்தது. 

கீழ்கண்ட விவரங்களை நாம் தமிழ் கட்டுரைகளில் பார்க்கப்போகிறோம்:

  • மக்கா பற்றி குர்-ஆனில் ஹதீஸ்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் புவியியல் விவரங்கள் தற்கால “மக்காவை” குறிப்பனவனாக காணப்படுவதில்லை ஏன்?  ஆனால், அவ்விவரங்கள் பெட்ராவிற்கு ஏன் கச்சிதமாக பொருந்துகிறது?
  • ஆரம்ப கால மசூதிகள் மற்றும் கிப்லா ஏன் பெட்ராவை நோக்கி கட்டப்பட்டுள்ளது. 
  • எப்போது கிப்லா பெட்ராவிலிருந்து தற்கால மக்காவிற்கு மாறியது? மாற்றியது யார்?
  • மக்காவிற்கு இஸ்லாம் மாறிய பிறகு அனைத்து மசூதிகளும் மக்காவின் காபாவை (கிப்லா) நோக்கியே மாற்றப்பட்டுள்ளது / திருத்தி கட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்:

”இஸ்லாம்” தங்கள் வாழ்வின் முக்கியமான அம்சம் என்று கருதும் முஸ்லிம்கள், முதலாவது ஆங்கில புத்தகத்தை வாங்கி படியுங்கள். இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து  விவரங்களையும் நான் தமிழில் பதிக்கமுடியாது. ஆசிரியர் முன்வைத்த அனைத்து ஆதாரங்களையும், வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்துப் பாருங்கள். உங்கள் கண்டுபிடிப்பை அல்லது பதிலை ”தகுந்த ஆதாரங்களோடு” மறுப்பு எழுதுங்கள். அவைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் அந்த சரித்திர ஆசிரியரை தொடர்பு கொண்டு அவருக்கு அனுப்பி விளக்கம் கேட்போம். 

வாருங்கள், மக்கா இஸ்லாமின் புனித நகரமல்ல என்று ஆசிரியர் கிப்சன் முன்வைக்கும் ஒவ்வொரு காரணத்தையும் காண்போம்.

அடிக்குறிப்புகள்:

[1] Quranic Geography – Amazon http://www.amazon.com/Quranic-Geography-Dan-Gibson/dp/0973364289

Book Description: This book covers historical records of the four known times when peoples of the Arabian peninsula united and burst out of the Arabian deserts to conquer other nations (topics such as: The People of 'Ad, People of Thamud, Midianites, etc.). The book also examines the geographical references in the Qur'an cross-referencing them with historical locations. The surprise comes when Gibson examines the Holy City of Islam, known as Mecca. Here Gibson finds evidence that the original Holy City was in northern Arabia in the city of Petra. He theorizes that during an Islamic civil war one hundred years after Muhammad, the Ka'ba was destroyed and the Black Rock was moved to its present location. Gibson examines archaeological, historical and literary evidence that support this theory and addresses many questions and objections that readers may have. This book contains many references, as well as some useful appendices including a 32 page time line of Islamic history from 550 AD - 1095 AD, and a 20 page annotated selected bibliography of early Islamic sources in chronological order from 724 AD - 1100 AD plus a list of many early Qur'anic manuscripts. Fully referenced with many illustrations and photos. It has library binding, and is a must for every academic library or scholar of Middle Eastern History.

மக்காவின் பிரச்சனைகள் கட்டுரைகளை படிக்க

உமரின் இதர கட்டுரைகள்