Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?

முன்னுரை: இந்திய இஸ்லாமிய அறிஞர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருத்துவர் ஜாகிர் நாயக் ஆவார். இவரது சொற்பொழிவு அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இன்னும் இவர் மாற்று மதச்சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் தரும் நிகழ்ச்சியில் பேசினால், இஸ்லாமியர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலத்தான். ஆனால், இவர் சொல்லும் எடுத்துக்காட்டுக்கள், புள்ளிவிவரங்கள் உண்மையை திசை திருப்புவதாகவே பெரும்பான்மையாக அமையும்.இதை இஸ்லாமியர்கள் சோதித்து தெரிந்துக் கொள்ளமாட்டார்கள். 


இந்த கட்டுரையில் திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் சொன்ன கருத்துக்களைக் காண்போம். இவர் ஒருவரை தேசத்துரோகி என்கிறார்? அதாவது தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு அந்த நபரை சமமாக்குகிறார்.இவர் யாரை தேசத்துரோகி என்கிறார்? இஸ்லாம் சட்டத்தை எப்படி இவர் மற்ற நாட்டு சட்டத்தோடு சம்மந்தப்படுத்துகிறார்? என்பதை இக்கட்டுரையில் காண்போம். இவ‌ர் அங்கீகரிக்கும் இதே சட்டம் மற்றவர்கள் தங்கள் மதத்திற்கு சட்டமாக்கி பின்பற்ற‌ இவரோ அல்லது இந்திய இஸ்லாமியர்களோ அனுமதி கொடுப்பார்களா? என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

1.
இஸ்லாமைவிட்டு வெளியே சென்றால், உனக்கு மரண தண்டனை நிச்சயம்:

திரு ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய இந்த வார்த்தைகளை இந்த வீடியோவில் (http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI) காணலாம்.

 

அவரின் பேச்சை இந்த வீடியோவில் உருதுவில் கேட்கலாம், அதை சுருக்கமாக ஆங்கிலத்தில் வீடியோவின் கீழே கொடுத்துள்ளார்கள், அதை நான் தமிழில் கொடுக்கிறேன். 

நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம், மற்ற மதத்தை தழுவும் போது, ஏன் அவனுக்கு "மரண தண்டனை" கொடுக்கப்படுகிறது? 

ஒரு முஸ்லீம், இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மத‌ம் சரியானது என்று நினைக்கும்போது அல்லது ஒரு முஸ்லீம் அல்லாதவர் முதலில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, பிறகு தன் முந்தைய மதத்திற்கே சென்றுவிட்டால், ஏன் இஸ்லாம் இப்படிப்பட்ட நபர்களுக்கு "மரண தண்டனையை" விதிக்கிறது? 

Dr. ஜாகிர் நாயக் அவர்கள்: ஒரு முஸ்லீம் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால், இது ஒரு "தேசத் துரோகம் (Treason)" என்ற குற்றத்திற்கு சமமாகும். இப்படிப்பட்ட நபருக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும். பல நாடுகளில் "தேசத்துரோக" குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு. பல நாடுகளில் உள்ள சட்டத்தின்படி ஒரு இராணுவ தளபதி ( Army General) தன் நாட்டு இராணுவ இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு விற்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும். இதே மாதிரி, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறி வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த மதத்தை பிரச்சாரம் செய்தால், அவனுக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும். 

நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: நீங்கள் ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்லியுள்ளீர்கள், அதாவது, ஒரு தேசத்துரோகம் குற்றத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைப் போல, தன் மதத்தை மாற்றிக்கொள்பவனுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் "தேசத்துரோகம்" குற்றத்திற்கு "மரண தண்டனை" விதிப்பது போல, இஸ்லாமும் தன் மதத்தை மாற்றிக்கொள்ளும் முஸ்லீமுக்கு மரண தண்டனையை நியாயமாக விதிக்கிறது 

Interviewer: Why is there a "Capital Punishment" for a Muslim – living in an Islamic State – who chooses to adopt any other religion? 

If a Muslim finds any other religion more appealing or If a Non-Muslim, after accepting Islam, decides to return to his/her previous religion then Why does Islam impose a "Death Penalty" for such a person? 

Naik Response: If a Muslim becomes a Non-Muslim and propagates his/her new religion then it is as good as Treason. There is a "Death Penalty" in Islam for such a person. In many countries the punishment for Treason is also Death. If an army General discloses his army's secrets to another country then there is a "Death Penalty" or life imprisonment for such a person according to the laws of the most of the countries.Similarly If a Muslim becomes Non-Muslim and propagates his/her new religion then there is "Death Penalty" for such a person in Islam. 

Interviewer: You have explained a very important point that the Death Penalty is more due to Treason than due to Changing the religion. Since in most of the countries the punishment for Treason is Death therefore Islam is also justified in declaring a "Death Penalty" for a Muslim converting to any other religion.
 

Source : http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI

2. இராணுவ தளபதியின் தேசத்துரோகத்திற்கும், இஸ்லாமை விட்டு வெளியே வருவதற்கும் என்ன சம்மந்தம்? 

இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்குச் செல்லும் முஸ்லீமை இஸ்லாம் சட்டப்படி கொல்ல வேண்டும். ஜாகிர் நாயக் அவர்கள் இதை சிறிது மாற்றி , "இப்படி மாறுபவன் அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால்" கொல்லப்படுவான் என்றுச் சொல்கிறார். ஆனால், இஸ்லாமை விட்டு வெளியேறினாலே போதும், அவனுக்கு மரண தண்டனை உண்டு என்பதை நாம் அறிவோம். இப்போது பிரச்சனை இதுவல்ல. 

ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதா? என்பது தான் கேள்வி 

ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டுகளை கேட்டு,முஸ்லீம்கள் புல்லரித்துப்போவார்கள், ஆனால், இவர் கொடுக்கும் எடுத்துக்காட்டு சம்மந்தம் இல்லாமல் இருக்கும். எப்படி என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா? மேலும் படியுங்கள். 

தேசத் துரோகத்திற்கு விகிபீடியா கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறது: (இதையே ஜாகிர் நாயக் அவர்கள் "இராணுவ தளபதி" என்று சுருக்கமாக சொல்லிவிட்டார்) 

In law, treason is the crime that covers some of the more serious acts of disloyalty to one's sovereign or nation. Historically, treason also covered the murder of specific social superiors, such as the murder of a husband by his wife (treason against the king was known as high treason and treason against a lesser superior was petit treason). A person who commits treason is known as a traitor. 

Oran's Dictionary of the Law (1983) defines treason as: "...[a]...citizen's actions to help a foreign government overthrow, make war against, or seriously injure the [parent nation]." In many nations, it is also often considered treason to attempt or conspire to overthrow the government, even if no foreign country is aided or involved by such an endeavour. 

Source: http://en.wikipedia.org/wiki/Treason
 

அதாவது தன் சொந்த நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் புரிதல், அல்லது தன் நாட்டு அரசாங்கம் கவிழும்படி, தோற்கும் படி தன் நாட்டின் இரகசியங்களை மற்ற நாடுகளுக்கு விற்றுவிடுதல், போன்ற குற்றத்திற்கு Treason என்பார்கள். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டிற்கு பெரும் இழப்பை தரும் செயல் ஆகும்(அரசனை கொல்லுதல், இராணுவ இரகசியங்களை விற்றுவிடுதல் போன்றவை). 

3.
எதை அடிப்படையாகக் கொண்டு ஜாகிர் நாயக் அவர்கள் இதை உதாரணமாகச் சொன்னார்கள்? 

ஒரு முஸ்லீமோ அல்லது முஸ்லீமாக மாறி பிறகு தன் பழைய மதத்திற்கு மாறும் நபர் எந்த வகையில், ஒரு தேசத்துரோகம் புரிந்த அளவிற்கு மிகப்பெரிய குற்றவாளியாக மாறுகிறார்? 

நான் ஜாகிர் நாயக் அவர்களிடமும், மற்ற முஸ்லீம்களிடமும் கேட்க விரும்பும் கேள்விகள்:

a) ஒரு இராணுவ தளபதி தனக்கு மட்டும் தெரிந்த நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியங்களை, மற்ற நாட்டிற்கு விற்றால், தன் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு வர காரணமாகிறார்.

b) ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்குச் சென்று தன் புதிய மதத்தையோ அல்லது தான் விட்டுவந்த பழைய மதத்தையோ பிரச்சாரம் செய்தால், இந்த செயல் எந்த வகையில் "இஸ்லாமின் பாதுகாப்பிற்கு" பாதிப்பை உண்டாக்குவதாக அமையும்? விவரியுங்கள்?

c)
இராணுவ தளபதிக்கு தெரிந்த இரகசியங்கள் என்பது தன் நாட்டு குடிமகன்களுக்கே தெரியாமல் பாதுகாத்து வைக்கும் முக்கியமான தகவல்கள்,இப்படி இஸ்லாமில் என்ன இரகசியம் இருக்கப்போகிறது?இப்படி மற்ற மதங்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் இரகசியம் என்ன சொல்லுங்கள்?

d)
இராணுவ தளபதி என்பவன் நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வகிப்பவன் அதற்காகவே அவருக்கு சம்பளம், பதவி, அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி அளிக்கப்படுகிறது. ஒரு முஸ்லீமுக்கும் இப்படி ஒரு இராணுவ தளபதிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? சொல்லுங்கள்.

e)
ஒரு இராணுவ தளபதி தன் நாட்டின் ஆயுத கிடங்கு இருக்கும் இடம், தகவல்கள், ஆவணங்கள், போன்ற விவரங்களை மற்ற நாட்டிற்கு விற்பது போல, இஸ்லாம் மதத்தில் அப்படி என்ன இரகசியங்கள் இருக்கின்றன?

f)
புதிதாக மாற்று மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவனுக்கு என்ன பரம‌ இரகசியங்களை நீங்கள் சொல்லிவிடுகின்றீர்கள்? அதை அவன் வேறு மதத்திற்கு மாறி மற்றவர்களுக்கு சொல்வதினால், இஸ்லாமுக்கு ஆபத்து வந்துவிடும் அளவிற்கு? 

4. இஸ்லாமில் இரகசிய பிரமாணம் எடுக்கின்றீர்களா? 

பொதுவாக, ஒரு அரசாங்க, அல்லது ஒரு இராணுவ ஊழியம் செய்ய ஒருவன் நியமிக்கும் போது, அவனுக்கு இரகசிய பிரமாணம் அல்லது பதவி பிரமாணம் கொடுப்பார்கள். இராணுவ தளபதி பிரமாணம் எடுக்கும் போது: "நாட்டின் இரகசியங்களை வெளியே சொல்லமாட்டேன், நம்பிக்கையுள்ளவனாக இருப்பேன், அதை மீறினால் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கலாம்" என்றுச் சொல்லி பிரமாணம் செய்வார். 

இப்படி ஏதாவது ஒரு பிரமாணத்தை இஸ்லாமுக்கு வருபவன் எடுக்கிறானா? அப்படி நான் இந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்லும் போது என்னை கொல்ல நான் அனுமதி கொடுக்கிறேன் என்று சொல்லி தான் முஸ்லீமாக மாறுகிறானா? அவன் சில ஆவணங்களில் இதற்காக கையெழுத்து போடுகிறானா? சொல்லுங்கள். 

5.
புகைபிடித்தல், மதுபானம் பற்றிய எச்சரிக்கை வாசகம், போல இஸ்லாமுக்கு உண்டா? 

பொதுவாக, அரசாங்கத்திற்கு அதிக வருமானம் வரும் என்ற நோக்கில், சிகரேட், பீடி மற்றும் மதுபானத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்து, அதே நேரத்தில், மக்களுக்கு இவைகளினால் உண்டாகும் தீமையை விளக்கும் வண்ணமாக, சில வாசகங்களை பதிக்கும்படி அரசாங்கம் கட்டளையிடுகிறது. 

உதாரணத்திற்கு:

சட்ட எச்சரிக்கை: புகை பிடித்தல் உடல் நலத்திற்குகேடு 

Statutory Warning : "Cigarette smoking is injurious to health"

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு

போன்ற வரிகளை நாம் காணுவோம். (இந்த எச்சரிக்கை வார்த்தைகளை படித்து மக்கள் இவைகளை விட்டுவிடுகிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஒரு தீமை உண்டு என்று தெரிந்தும் அனுமதி அளிக்கும் போது, அதைப்பற்றி எச்சரிப்பு அவசியம் என்பதால் அரசாங்கம் இதை கட்டாயமாக்கியுள்ளது என்று சொல்லவருகிறேன்.) 

"உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், இந்த வாசகங்கள் கட்டாயம்" என்பதை எந்த நிபந்தனையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் போது, இஸ்லாமை விட்டு ஒருவன் வெளியேறினால் அவனது உயிரே போகும் என்ற தீமை அல்லது ஆபத்து இருக்கும் போது, ஏன் இஸ்லாமியர்கள் இதை முன்பே இஸ்லாமுக்கு வருபவனுக்குச் சொல்லி எச்சரிப்பதில்லை என்றுக் கேட்கிறேன். 

யாருக்காவது குர்‍ஆனை கொடுக்கும்போது, அல்லது எங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் கூட்டத்திற்கு வந்து இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள் என்று சொல்லும் போது, நீங்கள் அந்த கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ, அல்லது நாத்தீகனுக்கோ "பாரு தம்பி, ஒரு வேளை இஸ்லாமை நீ ஏற்றுக்கொண்டு பிறகு எனக்கு வேண்டாம்" என்று இஸ்லாமை விட்டு வெளியேறினால், உனக்கு மரண தண்டனை நிச்சயம் உண்டு என்பதை தெரிந்துக்கொள், இதை அங்கீகரித்து ஸ்டாம்ப் காகிகத்தில் கையெழுத்து போட்ட பிறகு தான் நீ முஸ்லீமாக மாறனும் என்று சொல்கிறீர்களா? 

Statutory Warning: After accepting Islam, becoming Non-Muslim is Injurious to Life.

முதலில் முஸ்லீமாகி பின்பு காபிரானால், மரணம் நிச்சயம்

என்ற வாசகத்தை உங்கள் நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி விவரிக்கும் போது சொல்லமுடியுமா? நான் "புகைப்பிடித்தல் மற்றும் மதுபான" எடுத்துக்காட்டு சொன்னேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டை விட ஓர் அளவிற்கு பொருத்தமான எடுத்துக்காட்டைத் தான் நான் கொடுத்துள்ளேன்.

6. நல்ல குடும்பம் நாசனமான கதை: 

நீங்கள் ஒரு சாதாரண முஸ்லீம், ஒரு கம்பனியில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் (இந்துவோ, கிறிஸ்தவனோ.. சீக்கியனோ, நாத்தீகனோ) உண்டு. அவன் தன் வயது சென்ற‌ பெற்றோர்களோடும், மனைவி பிள்ளைகளோடும் சந்தோஷமாக, வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடக்கும்பொது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். 

நீங்கள் தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுதுக்கொள்ளும் நல்ல மனிதர். கம்பனியில் வேலை செய்யும் போது, அடிக்கடி மதம் சம்மந்தப்பட்ட உரையாடலை நீங்களும் உங்கள் நண்பரும் விவாதித்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிப்பு வருகிறது, அக்கூட்டத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களோ அல்லது பிஜே அவர்களோ பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பரை இக்கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள், உன் கேள்விகளுக்கு சரியான பதிலை இக்கூட்டத்தில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொல்கிறீர்கள், அவரும் உங்களோடு கூட்டத்திற்குச் செல்கிறார். 

கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில்களையும் பார்த்து இந்த மாற்று மத நண்பர் ஆச்சரியப்பட்டு, இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார். 

அவருக்கு நீங்கள் சில இஸ்லாமிய புத்தகங்களை தருகிறீர்கள், அவரும் அதை படித்து, நான் முஸ்லீமாக விரும்புகிறேன். அல்லா தான் இறைவன் என்பதை நான் உணர்ந்தேன் என்றுச் சொல்ல, அவருக்கு இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றிச் சொல்லி, ஒரு நாள் அவர் முஸ்லீமாக தன்னை ஒரு கூட்டத்தில் அங்கீகரித்து முஸ்லீமாக மாறிவிட்டார். 

நாட்கள் கடந்தன, மாதங்கள் விறைவாக மறைந்தன, சில வருடங்கள் ஓடிவிட்டன. தன் பெற்றோரோ அல்லது மனைவி பிள்ளைகளோ இன்னும் முஸ்லீமாக மாறவில்லை மட்டுமல்ல, இவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது இன்ன பிற காரணங்களால், இந்த முன்னால் மாற்று மத நண்பர், மறுபடியும் தன் பழைய மதத்திற்கே (இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, அல்லது நாத்தீகனாகவோ) மாறுகிறேன் என்றுச் சொல்கிறார், மாறியும் விட்டார். தன்னுடைய பழைய மதத்தில் இப்போது ஆர்வமாக சில மார்க்க வேலையையும் செய்கிறார். 

இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இவனுக்கு முஸ்லீமாக அவகாசம் கொடுக்கப்பட்டது இவர் இல்லை என்று மறுக்க, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனென்றால், இவன் ஒரு தேசத்துரோகி, அதாவது, ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது போல இவன் ஒரு தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு சமமான குற்றம் செய்தவர் ஆவார்.

 
7. யார் தேசத்துரோகி? 

இப்போது சில கேள்விகள் நம் கண்முன் நிற்கின்றன. 

  • இந்த நபர் மரித்ததால்: 
  • இவர் மனைவி இப்போது "விதவை" கோலத்தில் கண்கலங்கி நிற்கிறாள்?
  • இவரது பிள்ளைகள் தந்தையில்லா அனாதைகளாய் தெருவில் நிற்கிறார்கள்?
  • இவரது பெற்றோருக்கு இனி வாழ எந்த வழியும் தெரியாத கஷ்டத்தில் இருக்கிறார்கள்? 

இந்த நிலையில் "இதை படிக்கும் முஸ்லீம் சகோதரரே"! நீங்களே சொல்லுங்கள் தேசத்துரோகி யார்?  1. முதலில் முஸ்லீமாக மாறி பிறகு வேண்டாமென்று சொன்ன இந்த மாற்று மத நண்பன் தேசத்துரோகியா? அல்லது  2. இவனுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொன்ன நீங்கள் தேசத்துரோகியா? அல்லது  3. இஸ்லாமைப் பற்றி கூட்டங்கள் நடத்தி மக்களை இஸ்லாமுக்கு அழைப்பவர்கள் தேசத் துரோகிகளா?


இந்த கேள்விக்கான பதிலை உங்கள் கையிலேயே விட்டுவிடுகிறேன். 

மதம் என்றால் மனது சம்மந்தப்பட்டது இல்லையா? மனிதன் சில நேரங்களில் தான் எடுத்த முடிவு தவறு என்றுச் சொல்லி தன் முடிவை மாற்றிக்கொள்வதில்லையா? அதாவது, பல ஆண்டுகள்(30 அல்லது 40 வயதுடைய மனிதன்) தன் முன்னோர்களோடு சேர்ந்து பின்பற்றிய மதத்தை விட்டுத்தானே அவன் முஸ்லீமாக அல்லது கிறிஸ்தவனாக மாறுகிறான். பல ஆண்டுகள் தன் மனதில் சரி என்று பட்ட மார்க்கத்தை விட்டு, திடீரென்று வேறு முடிவு எடுத்துத் தானே அவன் வேறு மதத்திற்கு மாறுகிறான். அப்படி இருக்கும் போது, சில ஆண்டுகள் பின்பற்றும் மதத்தை பின்பற்றாமல் இருக்க அவனால் முடியாதா? இது தவறா? 

யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்த மரித்த நபர் உயிரோடு இருந்திருப்பாரானால், மறுபடியும் முஸ்லீமாக மாறி, இஸ்லாமை பரப்பி ஒரு சிறந்த இஸ்லாமியனாக கூட மாறி எல்லாரும் ஆச்சரியம் அடையும் அளவிற்கு மாறி இஸ்லாமுக்கு ஒரு நல்ல தூணாகவும் மாற்றப்பட்டு இருக்கலாம்? இதற்கு வாய்ப்பு இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? 

8. சரி, மாற்று மதத்திலிருந்து முஸ்லீமாக மாறுபவன் "தேசத்துரோகி" இல்லையா? 

இஸ்லாம் சொல்லும் தண்டனை சரியானது தான், இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே! ஒரு வேளை இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறுபவனை "தேசத்துரோகி" என்றுச் சொல்லி, அவனுக்கு இஸ்லாமிய சட்டம் எப்படி சொல்கிறதோ அதே போல மரண தண்ட்னை அளித்தால்? 

ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் இது தேசத்துரோகம் குற்றத்திற்கு சமம் என்றுச் சொல்லி, அவனை கொல்லும் சட்டத்தை அமுல் படுத்தினால் எப்படி இருக்கும்? 

இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமிய சட்டம் போலவே, யாரும் தங்கள் மத‌த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறக்கூடாது, அது தன் தாய் நாட்டிற்கு துரோகம் செய்த குற்றத்திற்கு சம‌ம் என்றுச் சொல்லி, முஸ்லீமாக மாறுபவனுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை அமுல் படுத்த உங்களுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு சம்மதமா? நீங்கள் உண்மையாளர்களாக நேர்மையாளர்களாக இருப்பீர்களானால், இதை ஏற்றுக்கொள்வீர்கள். 

இஸ்லாமுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி! இது சரியா? 

9. இஸ்லாமை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நண்பா! இனி எப்படி அறிமுகப்படுத்தப் போகிறீர்கள்? 

இனி இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது, சிகரேட் பாக்கெட்டில் இருப்பது போலவும், மதுபான கடையின் பெயர் பலகையில் எழுதியிருப்பது போலவும், இஸ்லாமை விட்டு வெளியேறினால் ஏற்படும் தீமையையும் சொல்ல விருப்பமா? ஒரு கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ இஸ்லாமைப் பற்றி சொல்லும்பொது, அவன் மனைவியின் முகம் உங்களுக்கு முன்பாக வருவதாக, அவன் பிள்ளைகளின் பிஞ்சு முகங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக வருதாக. 

இந்தியாவில் இப்படிப்பட்ட தண்டனைகள் இல்லை, இஸ்லாம் இப்படி எல்லாம் செய்ய சொல்வதில்லை என்று சொல்லவேண்டாம், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறும் மனிதர்களின் நிலை என்ன என்பதை மக்கள் மிகவும் நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

10. இரட்டை தண்டனை எதற்கு: 

இஸ்லாமை விட்டு வெளியேறுபவனுக்கு இரட்டை தண்டனை எதற்கு? 

முதல் தண்டனை: ஷரியா சட்டம் மூலமாக அவனுக்கு மரண தண்டனை

இரண்டாம் தண்டனை: இஸ்லாமை அவன் விட்டுச்சென்றதால், அல்லா அவனை நரக நெருப்பினால் தண்டிப்பார் 

இஸ்லாமை விட்டு வெளியேறினவனுக்கு இந்த உலகத்தில் மரண தண்டனை கொடுத்துவிட்டால், பின் ஏன் அவனுக்கு நரக நெருப்பினாலும் அல்லா இரண்டாம் முறையும் தண்டிக்கவேண்டும். ஏன் இரட்டை தண்டனை? 

அல்லது இந்த உலகத்தில் மரண தண்டனையை அவன் பெற்றுவிட்டதால், அல்லா அவனுக்கு சொர்க்கத்தில் அனுமதி அளித்துவிடுவாரோ? 

இது உண்மையானால், இஸ்லாமை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளாதவனின் நிலையே மிகவும் நல்லது. ஏனென்றால், அவன் இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ இருப்பதினால், இந்த உலகத்திலாவது தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு மரிப்பான். இஸ்லாம் உண்மையான மார்க்கமாக இருந்தால் தானே இவன் அல்லாவினால் தண்டிக்கப்படப்போகிறான். 

11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி? 

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு. 

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் ஜாகிர் நாயக் அவர்கள் செய்துள்ளார்கள். 

ஜாகிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகள்:

1. இஸ்லாமின் மரண தண்டனை சட்டத்தோடு, மற்ற நாடுகளின் சட்டத்தை ஒப்பிட்டு உதாரணம் காட்டும் ஜாகிர் நாயக் அவர்களே, இதே போல மற்ற நாடுகளின் சட்டத்தை வேறு சில இஸ்லாமிய சட்டத்தோடு ஒப்பிட நீங்கள் தயாரா?


2.
அதாவது, இதர காபிர் (இந்தியா போன்ற) நாடுகளில் "திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, இன்னபிற குற்றங்களுக்கு உள்ள தண்டனைகளை, இஸ்லாமிய சட்டத்தில் திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, சம்மந்தப்படுத்த" நீங்கள் தயாரா?

3.
பெரும்பான்மையான நாடுகளில் திருட்டிற்கு என்ன தண்டனை கொடுக்கிறார்ளோ அதே தண்டனையை நீங்கள் இஸ்லாம் நாடுகளில் அமுல் படுத்த தயாரா? 

4.
ஒரு மதத்திலிருந்து வெளியேறுபவனின் செயலுக்கு, மிகவும் கொடிய குற்றமாக கருத்தப்படும், நாட்டிற்கே ஆபத்தை விளைவிக்கும் குற்றமாக கருத்தப்படும் தேசத்துரோக குற்றத்தோடு முடி போடுகிறீர்களே, உங்கள் எடுத்துக்காட்டை என்னவென்றுச் சொல்ல? ஒரு இராணுவ தளபதி நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியத்தை வெளிநாட்டிற்கு விற்றுவிட்டால், தன் நாடு அழியும் அபாயம் உள்ளது. இந்த ஒரு மனிதனின் செயலால், நாடே அழிந்துவிடும். ஆனால், ஒரு மனிதன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டால், இஸ்லாம் அழியுமா? சிந்தியுங்கள். 

5.
 அல்லாவின் சட்டத்தில் உள்ள மரண தண்டனையை நியாயப்படுத்த மற்ற நாடுகளின் (காபிர் நாடுகளின்) சட்டத்தில் என்ன குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளதோ அதை சம்மந்தப்படுத்தி சொல்லிவிடுகிறீர்கள்? இது போல, மற்ற நாடுகளின் எல்லா சட்டங்களோடு இஸ்லாமிய சட்டத்தை சம்மந்தப்படுத்தி நியாயப்படுத்த நீங்கள் தயாரா?

முடிவுரை: அருமையான மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களே, மாற்று மதத்திலிருந்து இஸ்லாமியர்களாக மாறியவ‌ர்களுக்கு உங்கள் கண்களுக்கு முன்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உங்களால் சகித்துக்கொள்ளமுடியுமா? ஏனென்றால், அவன் தன் மதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து தானே முஸ்லீமாக மாறினான்? 

இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ஜாகிர் நாயக் அவர்களே! நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper): 

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே" 

இப்படிக்கு, 

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு 

சாட்சி 1:

சாட்சி 2:

என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்