யூத மதத்தைப் பின்பற்றுவோர் பரலோகம் (சொர்க்கம்) செல்வார்கள் என‌ நீங்கள் நம்புகிறீர்களா?

கேள்வி: 

யூத மதத்தைப் பின்பற்றுவோர் பரலோகம் (சொர்க்கம்) செல்வார்கள் என‌ நீங்கள் நம்புகிறீர்களா? 

என் பதில்: 

தேவன் தன் ஜனமாகிய யூதர்களுக்கு பல வகைகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறார் என நான் நம்புகிறேன். என்றாலும், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் மரிக்கும் யூதர்கள் அதே நிலையில் மரிக்கும் இதர மக்களை விட‌ எந்த வகையிலும் சிறந்தவர் இல்லை. 

பல்லாயிரக்கணக்கான "மெசியானிக் யூதர்கள்” (Messianic Jews) உள்ளனர். இவர்கள் யூத மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுவதோடு இயேசுவை தேவ குமாரனென்றும் ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் இரட்சிக்கப்பட்ட யூதர்கள். 

என் அறிவுக்கெட்டிய அளவிற்கு மற்ற யூதர்கள் பரலோக இராஜ்ஜியத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை என நான் நம்புகிறேன். தேவனின் கருணையின் அளவு யாருக்குத் தெரியும்? ஆனால் இயேசுவை ஏற்காதவர்கள் மீட்படைவது குறித்து நமக்கு எந்த உறுதியான வாக்குத்தத்தமும் இல்லை. 

"அப்படியானால் இயேசுவுக்கு முன் வாழ்ந்த ஆபிரகாம், தாவீது போன்ற விசுவாசிகளின் நிலை என்ன?" என நீங்கள் கேட்கலாம். 

பைபிள் அவர்கள் பேரின்பவீட்டில் இருப்பதை தெளிவாகக் கூறுகிறது என நம்புகிறேன். தேவனின் வார்த்தை மீது வைக்கும் விசுவாசமே நம்மை இரட்சிக்கிறது: 

- அது எதிர்காலத்தில் தேவன் என்ன செய்வார் என்பதைப் பற்றினதாக இருக்கலாம் (பழைய ஏற்பாட்டுக் கால விசுவாசிகள் மெசியா குறித்த தேவனின் வாக்கை நம்பியதன் மூலம் இரட்சிப்படைகிறார்கள்) 

அல்லது 

- கர்த்தர் கடந்தகாலத்தில் என்ன செய்தார் என்பதைப் பற்றினதாக இருக்கலாம் (இப்பொழுதுள்ள நிலை, நாம் புதிய ஏற்பாட்டுச் சம்பவங்களைப் பின்நோக்கிப் பார்த்து இரட்சிப்படைகிறோம் குறிப்பாக கிறிஸ்துவின் சிலுவையையும் உயிர்த்தெழுதலையும் நம்புகிறோம்.)


நான் ஒரு வழுவும் மனிதன் என்பதை மனதில் கொள்ளவும். என்னுடைய அறிவுக்கு எட்டியவரை நான் பதிலளிக்கிறேன். நான் சொல்வதனைத்தும் சரி என்று நான் கூறவில்லை. நான் திருத்தங்களையும், தெளிவுபடுத்தல்களையும் வரவேற்கிறேன்.


ஆங்கில மூலம்: Do you believe followers of Judaism will go to heaven? 

இதர கேள்வி பதில்களை படிக்கவும்