எல்லா மனிதருக்கும் தங்கள் சொந்த கருத்தைச் சொல்ல உரிமை உண்டு,
ஆனால், உண்மையை மறைக்கும் உரிமை எவருக்குமில்லை - பெர்னாட் புருச்

மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் 

The Messiah and the Qur'an

மேசியா அல்லது மஸீஹா என்ற வார்த்தையைப் பற்றி குர்‍ஆனுக்கு பிரச்சனை உள்ளது. 

மஸீஹா என்ற வார்த்தையைப் பற்றி அடிக்கடி குர்‍ஆன் பேசுகின்றது. கிறிஸ்தவ மற்றும் முக்கியமாக யூத வேதங்களில் உள்ள விவரங்களை தெரிந்துக்கொள்ளாமல் குர்‍ஆன் அறியாமையில் மஸீஹா பற்றி பேசுகின்றது. குர்‍‍ஆனை படிக்கும் போது இது மிகவும் தெளிவாக தெரிகின்றது.

குர்‍ஆன் 4:171

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. …. 

O People of the Scripture! Do not exaggerate in your religion nor utter aught concerning Allah save the truth. The Messiah, Jesus son of Mary, was only a messenger of Allah, and His word which He conveyed unto Mary, and a spirit from Him. So believe in Allah and His messengers, ... 

குர்‍ஆன் 5:75

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை . இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். …. 

The Messiah, son of Mary, was no other than a messenger, messengers (the like of whom) had passed away before him. ...

ஒரே வசனத்தில் இயேசுவை மஸீஹா என்றுச் சொல்வதும், மற்றும் அதே வசனத்தில் அவர் மற்றவர்களைப் போல வெறும் "இறைத்தூதர்" மட்டும் தான் என்றுச் சொல்வதும், குர்‍ஆனின் சுய முரண்பாடு ஆகும்

மஸீஹா இதர நபிகளைப்போல ஒருவர் தான் என்று சொன்னால், பின் ஏன் அவருக்கு மட்டும் மஸீஹா என்ற சிறப்புப் பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது?

மஸீஹா என்ற பட்டப்பெயருக்கு அர்த்தம் என்ன? என்று குர்‍ஆன் சொல்வதில்லை, முக்கியமாக யூத கிறிஸ்தவ வேதங்களிலிருந்து இவ்வார்த்தையை குர்‍ஆன் எடுத்து கையாண்டுள்ளது என்பது மட்டும் புரிகின்றது. ஆகையால், இஸ்லாமியர்களிடம் நாம் கேட்கிறோம், இவ்வார்த்தையின் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யூத கிறிஸ்தவ வேதங்களில் இவ்வார்த்தைக்கு என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? 

மஸீஹா அல்லது மேசியா என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ள இக்கட்டுரைகளை படிக்கவும்

ஆங்கில மூலம்: The Messiah and the Qur'an

இதர குர்‍ஆன் விரிவுரை கட்டுரைகள்